கம்பராமாயணம் 2316 · அயோத்தியா 9.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைந்தன் - பரதன்; ஐந்தும் ஐந்தும் நாள் - பத்து நாள்களும்; ஊழி ஆம் என - ஒரு யுகக்காலம் போலத் தோன்ற; வெம் துயரக் கடலின் வைகினான் - கொடிய துன்பக் கடலில் கிடந்து; தந்தை தன்வயின் - தந்தையிடத்து; தருமம் யாவையும் - செய்ய வேண்டிய இயல்புகள் (சடங்குகள்) எல்லாவற்றையும்; முந்தை நூலுளோர் முறையின் - முன்னோர் கூறிய ஒழுக்க நூல்களிற் கண்டுள்ள முறைப்படியே; முற்றினான் - செய்து முடித்தான்.
சத்துருக்கனனைக் கொண்டு செய்து முடித்தான் என்பது கருத்து. தலைமை பரதன் மேற்றாதலின் மைந்தன் என்றது பரதனையே குறிக்கும்; தந்தைக்குரிய கடன்களைச் சத்துருக்கனன் செய்தான் ஆயினும், பரதன் தானே தன்பொருட்டு ஆற்றவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை ஆற்றினான் என்றலும் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For five and five days, each like an age,
- the son stayed in a sea of burning sorrow,
- and all the rites due to his father
- he completed in the manner of the ancient lawgivers.
What the poem says
For ten days, each of which feels like an aeon, Paratan remains in an ocean of grief, and during that time he sees to it that every rite owed to his father is completed as the ancient texts prescribe.
The rites were performed through Cattirukkaṉaṉ, but Paratan is named as the one responsible. He may also have made the water offerings that he was entitled to make on his own account.