கம்பராமாயணம் 2317 · அயோத்தியா 9.140
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெற்றி மா தவன் - எய்தன எய்தற்பாலதாய சிறந்த பெருந்தவத்தைச் செய்து முடித்த வசிட்டன்; முற்றும் - தயரதனுக்குரிய சடங்குகள் முழுதும்; முற்றுவித்து உதவி - நிரம்புமாறு செய்துதவி; (பிறகு) மும்மை நூல் சுற்றம் யாவையும் தொடர - முப்புரிநூல் அணிந்த வேதியர் அனைவரும் தன்னைத் தொடர்ந்து வர; தோன்றினான் - பரதன் அரண்மனையில் தோன்றினான்; வினை முடித்த - தயரதனுக்குச் செய்யவேண்டிய இறுதிச் செயல்களைச் செய்து நிறைவேற்றிய; அக் கொற்ற வேல் நெடுங் குமரன் - அந்த வெற்றி பொருந்திய வேலை ஏந்திய உயர்ந்த குமரனாகிய பரதனுக்கு; கூறுவான் - எடுத்துச் சொல்லலானான்.
முன்பாடலிற் போலவே சடங்குகளைப் பரதன் முடித்ததாக இப்பாடலிலும் கூறினான். முன் பாடலிற் போலவே தலைமைபற்றிப் பரதனைக் குறித்ததாகக் கொள்க.
வான்மீகம் பதினான்காம் நாள் வைகறையில் அரசனை நியமிப்பவர்கள் பரதனைச் சேர்ந்து சொல்லத் தொடங்கினர் என்று கூறும். ‘வெற்றி மாதவன்’ கௌசிக மகாராஜாவை வெற்றிகொண்டு விசுவாமித்திரனாக்கியது குறித்தது; ‘மும்மை நூல் சுற்றம்’ என்றது அந்தணரைக் குறித்தது; இவர் வசிட்டனுடன் வந்தோர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having had everything completed and helped it through, with all his kin
- of the threefold thread following him, he appeared;
- the victorious great ascetic, to that tall prince of the conquering spear
- who had finished the rites, began to speak.
What the poem says
When all the rites are complete, Vacittaṉ, the sage whose austerities have won him every victory, comes to the palace followed by the Brahmins who wear the sacred thread, and prepares to speak to Paratan.
His 'victory' recalls the old story in which his patience defeated King Kauśika, who in the end gave up his throne and became the sage Vicuvāmittiraṉ. In Vālmīki the king-makers approach Bharata at dawn on the fourteenth day.