கம்பராமாயணம் 2318 · அயோத்தியா 9.141

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

முன்னை மந்திரக் கிழவர் - தொன்மையான ஆலோசனைக்குரிய அமைச்சர்; அன்ன மாநிலத்து - அந்தக் கோசலநாட்டு; அறிஞர் தம்மொடும் - அறிவுடைப் பெருமக்களோடு; “வையம் - இந்த உலகம்; மன்னர் இன்றியே வைகல்தான் - அரசர் இல்லாமல் இருப்பது; தொன்மை அன்று” - பழமையான (மரபு) நிலை அல்ல; எனத் துணியும் நெஞ்சினார் - என்று உறுதி செய்த மனம் உடையராய்; முந்தினார் - முற்பட்டு வந்து (பரதனைக் கூடினர்).

மதி அமைச்சர் அறிஞர்களுடன் பரதனை வந்தடைந்தனர் என்பதும். முன் பாட்டில் வசிட்டன் வருதல் கூறப்பெற்றதாதலின் ஏனையோர் வருகை இப்பாடலில் வந்தது. ‘அரசனில்லாமல் நாடு இருத்தல் மரபன்று’ அது பல தீங்குகள் ஏற்பட வழியாகும் என்று கருதிக் கூடினர் என்பதாம்.

வான்மீகம் இவ்விடத்தில் அரசன் இல்லாமையால் நாட்டுக்கு ஏற்படும் தீங்குகளை ஒரு சருக்கத்தால் விரிவாகக் கூறியுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Resolved in their hearts that 'for the world to be left
  2. without a king is not the ancient way',
  3. together with the wise men of that great land,
  4. the old ministers of counsel came forward first.

What the poem says

The senior ministers of the realm, together with the learned men of the Kōcala country, come quickly to Paratan. They are convinced that it is against ancient custom for the land to remain without a king, since a kingless country invites many evils.

This is the last verse of the episode of the funeral. Vālmīki devotes a whole canto at this point to the dangers of a land without a ruler.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṉar iṉṟiyē vaiyam vaikaltāṉ
toṉmai aṉṟu ' eṉat tuṇiyum neñciṉār,
aṉṉa mā nilattu aṟiñar tammoṭum,
muṉṉai mantirak kiḻavar muntiṉār.