கம்பராமாயணம் 2319 · அயோத்தியா 10.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரன்முறை தெரிந்து உணர் - அரச குலத்தின் மரபு முறைகளை ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து - வேதவழியில் செய்யப்படும் தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் - வேதத்திற் சிறந்த வசிட்ட முனிவனும்; ஆண்டையான் என - (பரதன் உள்ள) அவ்விடத்தில் இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் - (மந்திரக் கிழவர்கள்) ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து - விரைந்து அரசவைக்கு வந்து; ஈண்டினர் - நெருங்கி; பரியும் நெஞ்சினர் பரதனை வணங்கினர் - அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப் பரதனை வணங்கினார்கள்.
மேற் படலத்து இறுதிச் செய்யுளில் (2243.) ‘மந்திரக்கிழவர்’ என்பதனை இங்குத் தொடர்க. ‘விரகு’ என்பது இங்கு ஆலோசனை. இனி, நடக்கவேண்டிய செய்திபற்றிய ஆலோசிப்போடு வந்தார்கள் என அறிக. ‘பரிதல்’ துன்பச் சூழலில் பரதன் அரசு ஏற்க நேர்ந்துள்ள இக்கட்டான நிலையால் மனம் கசிந்து இரங்கலாம். மந்திரக் கிழவர் பரதனினும் மூத்தோர் ஆயினும் இப்போது பரதன் சக்கரவர்த்தி ஆதலின் ‘வணங்கினர்’ என்க. ‘அருமறை முனிவன்’ என்பதனுள் ‘அருமறை’ பெயரடை ஆதலின் கூறியது கூறல் ஆகாமை உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Learning that the sage of the rare Vedas, of great Vedic austerity,
- who knows and understands the rightful order, was there,
- they came quickly and gathered; they arrived with counsel prepared;
- with hearts full of pity they bowed to Paratan.
What the poem says
A new section begins, 'The Journey along the Road', in which Paratan sets out to bring Irāmaṉ back. The ministers learn that Vacittaṉ, the sage who knows the proper order of royal succession, is with Paratan, and they hurry to the assembly with their counsel ready.
Though they are older than Paratan, they bow to him, because for now he is the sovereign. Their hearts go out to him in the painful position of being asked to take the throne amid such grief.