கம்பராமாயணம் 2320 · அயோத்தியா 10.2

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்திரக் கிழவரும் , நகர மாந்தரும் ,
தந்திரத் தலைவரும் , தரணி பாலரும் ,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் ,
சுந்தரக் குரிசிலை மரபில் சுற்றினார் .

பொருள் · Meaning in Tamil

அந்தர முனிவரோடு - ஆகாய வழியில் இயங்கவல்ல முனிவர்களோடு; மந்திரக் கிழவரும் - மந்திராலோசனைக்கு உரிமை உடைய அமைச்சர்களும்; நகர மாந்தரும் - நகரத்தில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாய் உள்ளவர்களும்; தந்திரத் தலைவரும் - சேனைத் தலைவர்களும்; தரணிபாலரும் - அரசர்களும்; அறிஞர் யாவரும் - அவ்வத் துறையில் முறைபோகிய வல்லார்களும் ஆகிய அனைவரும்; சுந்தரக் குரிசிலை - அழகிற் சிறந்த பரதனை; மரபின் - அவரவர்க் குள்ள வரிசை முறையின்படி; சுற்றினார் - (நெருங்கிச்) சூழ்ந்து கொண்டார்கள்.

‘அறிஞர் யாவரும்’ என்பதனை ‘அன்ன மாநிலத் தறிஞர் தம்மொடும்’ (2243) என்பதனுடன் ஒப்புநோக்குக. அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் என்னும் ஐம்பெருங்குழுவின் உள்ளாரை இங்கு மந்திரக் கிழவர் தந்திரத் தலைவர் என்று குறிப்பிட்டார் என்க. புரோகிதர் - வசிட்டன் முதலிய ஆசாரியர். தூதுவர் சாரணர் என்பார் அமைச்சருள் அடங்குவர். எண்பேராயத்துள்ளும் ஒருசிலர் மந்திராலோசனைக் குரியர். “கரணத்தியலவர் கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் எண் பேராயம் என்ப” என்னும் அரசச் சுற்றத்தினருள் நகர மாந்தர் என்பார் காண்க. இதனைச் சிலம்பு “ஐம்பெருங் குழுவும் எண்பேராயமொடு........ அரசுவிளங்கு அவையம் முறையின்புகுதர” (சிலப். வஞ்சிக். 26.38 - 47) எனக் கூறுமாறு காண்க. மந்திராலோசனைச் சபையில் அவரவர் தகுதிக்கும் பதவிக்கும் ஏற்ப அமர்தற்குரிய இடங்கள் முறைப்படி வரையறுக்கப்படும். ஆதலின், ‘மரபின்’ என்று ஒரு சொல் அமைத்தார். மன்னராட்சியாயினும் மக்கள் ஆட்சி என்னும்படி அக்கால அரசு முறைகள் நடந்தன. ஆதலின், ‘நகர மாந்தர்களும்’ ஆலோசனைச் சபையில் இடம்பெற்றனர் எனக் கருதலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The elders of counsel, the people of the city,
  2. the chiefs of the army and the kings of the earth,
  3. and all the learned, with the sages who travel the sky,
  4. gathered in due order round the handsome prince.

What the poem says

The whole royal council assembles around Paratan: the senior ministers, representatives of the citizens, the army commanders, vassal kings, learned men of every field, and sages who can travel through the air.

Each takes his place according to rank, as was the custom in a royal council. The commentary points out that the citizens' representatives had a recognised place in such assemblies, so that even a monarchy was in some measure government by the people.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantirak kiḻavarum, nakara māntarum,
tantirat talaivarum, taraṇi pālarum,
antara muṉivarōṭu aṟiñar yāvarum,
cuntarak kuricilai marapiṉ cuṟṟiṉār.