கம்பராமாயணம் 2321 · அயோத்தியா 10.3

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுற்றினர் இருந்துழிச் சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர்வலான் , புலமை உள்ளத்தான் ,
கொற்றவற்கு உறு பொருள் குறித்த கொள்கையான்
முற்றுணர் முனிவனை முகத்து நோக்கினான் .

பொருள் · Meaning in Tamil

சுற்றினர் இருந்துழி - (வசிட்ட முனிவனும், மந்திரக் கிழவரும், அறிஞரும்) சூழ இருந்தபோது; கொற்றவர்க்கு உறுபொருள் - அரசர்க்குரிய சிறந்த பொருள்களை; குறித்த கொள்கையான் - நன்கு உணர்ந்து நிறைவேற்றும் கொள்கைப் பிடிப்பு உடைய; புலமை உள்ளத்தான் - அறிவால் நிறைந்த மனம் உடைய; சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர்வலான் - பொன்னால் இயன்ற பெரிய தேரைச் செலுத்துதலின் திறன் வாய்ந்த சுமந்திரன் என்னும் பெயருடைய (அமைச்சர்தலை)வன்; முற்று உணர் முனிவனை - எல்லாம் முழுதுணர்ந்த வசிட்ட முனிவனை; முகத்து நோக்கினான் - (தன் மனக்கருத்தை வாயால் உரைக்க வேண்டாது அது தோன்றும்படி) நேரே பார்த்தான்.

பரதனை அரசு ஏற்கச்செய்யும் தன் கருத்தைக் குறிப்பால் பார்வையால் அறிவித்தான் சுமந்திரனாதல் மேல் பெறப்படும். இவன் அமைச்சர்களுள் தலைவன். முன்னர்த் தயரதன் இராமனை அரசு ஏற்க அழைத்ததும் (1360) இவன் மூலமே. முடிசூட்டு விழாவிற்கு இராமனை அழைத்ததும், கைகேயியின் அழைப்பை இராமனுக்கு அறிவித்ததும் (1572-1575), இராமன் காடு செல்லுங்கால் தேர் ஓட்டிச் சென்றதும் இவனாதலும் (1856-1885) நகர் நீங்கு படலத்துள் வருதலின் இவன் தேர் ஓட்டுதலின் வல்லவன் ஆதல் அறிக; ‘தேர்வலான்’ என்பது (1858) முன்னும் வந்தது. ‘மந்திரி சுமந்திரனை’ (1850) என்பதனால் இவன் அமைச்சனாதலும் அறியப்படும். இவன் தயரதனுக்குத் தேர்ஓட்டியாக இருந்தான் என்பது (1898) முன் கூறப்பெற்றுள்ளது. பண்டைய அரசர்கள் மதியமைச்சர்களுள் தமக்கு மிகவும் அணுக்கமானவர்களைத் தேர் ஓட்டுநர்களாகக் கொள்வர். ‘தேர்வலான்’ என்பது தேர்தலில் வல்லான் - ஆராய்ந்து உறுதிகூற வல்லவன் எனவும் பொருள்பெற்று அமைச்சர்க்கும் பெயராதல் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they had gathered round, the master of the great golden chariot named Cumantiraṉ,
  2. of learned mind,
  3. whose principle was to keep in view what serves the king,
  4. looked straight at the face of the all-knowing sage.

What the poem says

As the council sits, Cumantiraṉ, chief minister and master charioteer, a man of learning devoted to the king's true interest, looks straight at Vacittaṉ, conveying his thought without speaking: Paratan must be asked to accept the throne.

Cumantiraṉ has played a central part before. He summoned Irāmaṉ to the coronation, brought Kaikēyi's summons, and drove Irāmaṉ's chariot into exile. Kings of old often chose their most trusted counsellors as charioteers, and 'master of the chariot' can also mean one skilled in deliberation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟiṉar iruntuḻic cumantirap peyarp
poṉ taṭan tēr valāṉ, pulamai uḷḷattāṉ,
koṟṟavarkku uṟu poruḷ kuṟitta koḷkaiyāṉ
muṟṟu uṇar muṉivaṉai mukattu nōkkiṉāṉ.