கம்பராமாயணம் 2322 · அயோத்தியா 10.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுமந்திரன் -; நோக்கினால் - மனத்தொடு பட்ட பார்வைக் குறிப்பினால்; நுவலலுற்றதை - சொல்லியதை; வாக்கினால் அன்றியே - (அவன்) வாயினாற் சொல்லாமலே; உணர்ந்த - தெரிந்துகொண்ட; மா தவன் - பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; “உலகம் காக்குதி - இந்த அரசாட்சியைப் பாதுகாப்பாய்; இது - இத்தரணி தாங்குதல்; நின் கடன் ஆம் - நீ (ஏற்றுச்) செய்யவேண்டிய கடமையாகும்;” என -; கோக் குமரனுக்கு - அரச குமாரனாகிய பரதனுக்கு; அது - அரசின் சிறப்பும் இன்றியமையாமையும்; தெரிய - விளங்கும்படி; கூறுவான் - எடுத்துரைக்கலானான்.
‘நோக்கு’ என்பது வெறும் பார்வையன்று; ‘மனத்தால் நோக்குதல்’ ஆகும். இதனை “இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்குச் சேனாவரையர் எழுதிய உரையான் உணர்க. (தொல். சொல். வேற். மயங்.) மந்திராலோசனையில் முதற்கண் அமைச்சர் தொடங்கலே முறை என்பது இதனால் அறியப்பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What Cumantiraṉ meant to say by his look,
- the great ascetic understood without a word spoken,
- and saying, 'Protect the world! That is your duty,'
- he began to explain it clearly to the royal prince.
What the poem says
Vacittaṉ understands Cumantiraṉ's meaning from his glance alone. He turns to Paratan and tells him that it is his duty to protect the world, and he begins to explain why a kingdom needs a king.
The look meant is not a mere glance but a gaze charged with intent. The order of events also shows the proper procedure in council: the minister opens the matter first.