கம்பராமாயணம் 2323 · அயோத்தியா 10.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“கோதறு குணத்தினாய்! - குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)வனே!; வேதியர் - அந்தணர்; அருந்தவர் - அரியதவம் செய்த முனிவர்; விருத்தர் - (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் - அரசர்கள்; ஆதியர் - முதலானோர்; நின்வயின் - உன்னிடத்து; அடைந்த காரியம் - வந்து சேர்ந்த செயல்; நீதியும் - (மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச நீதியையும்; தருமமும் - (அவரவர் செயலை அவரவர் செய்தற்குத் தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ - (அரசன் இல்லாமையால் சிதையாவண்ணம்) நிலை நிறுத்தவே; நீ; இது - இச்செயலை; மனத்துக் கோடி - மனத்தின் கண் நினைத்துக் கொள்வாயாக.”
அரச நீதியாவது எளியரை வலியர் வாட்டாது பாதுகாத்தலாகும். “மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்கும் காலைத்; தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்; ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ?” என்னும் (பெரிய. திருந. 36) பெரிய புராணச் செய்யுளான் அறிக. அரச தருமம் - குறைவேண்டுவார்க்கு அது நிரப்புதலாம். முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும் அரசன் காட்சிக்கெளியனாய் அது தீர்த்தலையே (குறள் 386. பரி. உரை) ண்டு தருமமும் என இரண்டாகக் கம்பர் வசிட்டன் வாக்கால் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The Brahmins, the great ascetics, the elders, the kings
- and the others have come to you on this matter
- to establish justice and dharma; take this
- to heart, O you of flawless virtue.'
What the poem says
Vacittaṉ addresses Paratan as a man of faultless character. The Brahmins, ascetics, elders and kings have come to him for one purpose: to keep justice and dharma from collapsing for lack of a king. He asks Paratan to consider this seriously.
The commentary distinguishes the two. Royal justice means protecting the weak from the strong and from the classical five dangers. Royal dharma means being accessible to all who seek redress or help, and supplying their needs.