கம்பராமாயணம் 2324 · அயோத்தியா 10.6

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ; ஐய ! நீ ;
இருமையும் தருவதற்கு இயைவது ; ஈண்டு இது ,
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் .

பொருள் · Meaning in Tamil

“ஐய! நீ -; தருமம் என்று ஒரு பொருள் - அறம் என்று சொல்லப் படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து - உலகிற்குத் தந்து (மக்கள் அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல் - நிலைநிறுத்துதல்; அருமை என்பது - மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது அறிதி - நன்கு அறிவாய்; ஈண்டு - இவ்விடத்தில்; இது - இவ்வறம்; இருமையும் - இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -; இயைவது - பொருந்தியதாகும்; இது - இவ்வறம்; தெருள்மனத்தார் - தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல் ஆகும் - செய்யும் செயலாகும்.

அறத்தின் சிறப்பும்; அது மேலோர்களால் மேற்கொள்ளப்பெற்றது என்பதும் கூறியதாகும். “இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு” (குறள். 23) என்பதனை ஒப்பு நோக்குக. ‘ஆல்’ அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To bring forth the one thing called dharma and establish it
  2. is a rare task, as you well know, sir;
  3. it is fit to bring both worlds here and hereafter;
  4. this is the deed done by those of clear mind.'

What the poem says

Vacittaṉ reminds Paratan that to bring dharma into the world and make it prevail is a rare and difficult achievement. Upholding it brings good in this life and the next, and it is what wise and clear-minded people undertake.

The Tirukkuṟaḷ likewise says that the greatness of those who understand both worlds and take up righteousness shines throughout the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tarumam eṉṟu oru poruḷ tantu nāṭṭutal
arumai eṉpatu peritu aṟiti; aiya! nī;
irumaiyum taruvataṟku iyaivatu; īṇṭu itu,
teruḷ maṉattār ceyyum ceyal itu ākumāl.