கம்பராமாயணம் 2327 · அயோத்தியா 10.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“முறை தெரிந்து - முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய நோக்குறின் - ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன - பிரமனால் படைக்கப்பட்டனவாகிய; மண்ணில் வானிடை - நிலத்திலும், விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் - நிறைந்து விளங்கும் பேரியல்போடு; நிற்ப - நிலைத்து நிற்பன; செல்வன - இயங்குவன (வாகிய பொருள்களில்); இறைவரை இல்லன - தலைவரைப் பெற்றிராத பொருள்கள்; யாவும் - எவையும்; காண்கிலம் - காண்கின்றிலோம் (யாம்).”
உலகிற்கு மன்னர் இன்றியமையாமை மேல் கூறியது. இங்குச் சரம், அசரம் ஆகிய இயங்கும், இயங்காப் பொருள்களுக்கும் தலைவர் இன்றியமையாமை உணர்த்தப்பெற்றது. ‘நிற்ப’ என்பன மலை, மரம் முதலியன. ‘செல்வ’ என்பன மக்கள், விலங்கு, பறவை முதலிய உயிர்களாம். அவற்றிடையேகூட ஒரு தலைமை என்பது உண்டு என்பது அறியப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If we examine the order of things and look at it through to the end,
- among all that the Vedic creator has made, on earth and in the sky,
- the things that stand and the things that move, in all their fullness,
- we see none at all that is without a lord.'
What the poem says
Vacittaṉ widens the argument. Looking carefully and thoroughly at everything Brahmā created on earth and in heaven, both what stays fixed, like mountains and trees, and what moves, like people, beasts and birds, nothing exists without a leader of some kind.
The previous verse spoke of worlds needing kings; this one says that every class of being, moving or unmoving, has its head.