கம்பராமாயணம் 2332 · அயோத்தியா 10.14

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க , யான் மகுடம் சூடுதல் ,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால் ,
ஈன்றவள் செய்கையின் இழுக்கு உண்டாகும் ஓ ?

பொருள் · Meaning in Tamil

“மூன்று உலகினுக்கும் - மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில் உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன் ஆம் - ஒப்பற்ற முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க - (எனக்கு) முன்னே பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் - யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்; சான்றவர் உரைசெய - பெரியோர்கள் தக்கதே என்று தம் வாயால் எடுத்துரைக்க; தருமம் ஆதலால் - அறம் என்று கருதப்படுகின்றது ஆதலால்; ஈன்றவள் செய்கையில் - (இதே செயலைச் செய்த) என்னைப் பெற்ற தாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ - தவறு உளதாகுமா?”

‘மூத்தவன் இருக்க இளையவனாகிய நான் அரசு புரிவது தருமம் என்று வசிட்டரே கூறினால் என் தாய் கூறியதில் என்ன தவறு?’ என்கிறான் பரதன். பெரியோர்கள் வார்த்தையும் தர்மவிரோதமாக இருக்கின்றதே என் திறத்தில் என்று புலம்பினானாம். ‘ஓ’ காரம் வினாப்பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While the one born first, the sole Lord
  2. of the three worlds, is living, for me to wear the crown
  3. has become dharma because the worthy say so; then
  4. can there be any fault in what my mother did?'

What the poem says

Paratan turns the council's argument back on it. His elder brother, who is himself the Lord of the three worlds, is alive. If wise men now declare it right for the younger brother to be crowned, then what fault can there be in what his mother did?

He is lamenting that even the words of the wise seem to go against dharma where he is concerned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūṉṟu ulakiṉukkum ōr mutalvaṉ āy mutal
tōṉṟiṉaṉ irukka, yāṉ makuṭam cūṭutal,
cāṉṟavar uraiceyat tarumam ātalāl,
īṉṟavaḷ ceykaiyil iḻukku uṇṭākumō?