கம்பராமாயணம் 2344 · அயோத்தியா 10.26

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண்ணின புரவி தேர் பகடு பண்டியும்
மண்ணினை மறைத்தன ; வளர்ந்த மா கொடி
விண்ணினை மறைத்தன ; விரிந்த மா துகள்
கண்ணினை மறைத்தன , கமலத் தோனை ஏ .

பொருள் · Meaning in Tamil

பண்ணின - அலங்கரிக்கப்பெற்றனவாகிய; புரவி, தேர், பகடு, பண்டியும் - குதிரை, தேர், யானை, வண்டி ஆகியவை; மண்ணினை மறைத்தன - (வெற்றிடம் இல்லாமல் பரந்திருத்தலின்) மண்ணை மறைத்துவிட்டன; மலிந்த மாக் கொடி - (சேனைகளில் அங்கங்கே) நிரம்பியுள்ள பெரிய கொடிகள்; விண்ணினை மறைத்தன - (ஆகாயம் எங்கும் கட்புலன் ஆகாதபடி பரந்திருத்தலின்) ஆகாயத்தை மறைத்து விட்டன; விரிந்த மாத்துகள் - சேனைகள் செல்வதால் மேல் எழுந்து விரிந்த பெரிய புழுதித் துகள்கள்; கமலத்தோனை - (சத்திய லோகத்தில் உள்ள) பிரமதேவனது; கண்ணினை மறைத்தன - கண்களை மறைத்துவிட்டன.

சேனைகளின் மிகுதி கூறியவாறாகும். பண்டியும் என்ற உம்மையை, புரவி, தேர், பகடு, என்பனவற்றோடும் பிரித்துக் கூட்டுக. ‘கமலத்தோனைக் கண்ணினை மறைத்தன’ என்பதனுள் இரண்டன்பாலும் வந்துள்ள ஐயுருபினை, ‘கமலத்தோனது கண்ணினை’ என்றேனும், ‘கமலத்தோனைக் கண்ணின்கண்’ என்றேனும் திரித்துப் பொருள் கொள்க. வேற்றுமைப் பொருள் மயக்கம் என்பர் இலக்கணநூலார். “முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை, முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே” “முதல் முன் ‘ஐ’ வரின், ‘கண்’ என் வேற்றுமை, சினைமுன் வருதல் தெள்ளிது என்ப” என்னும் (தொல். சொல். வேற். மயங். 4, 5.) நூற்பாக்களைக் காண்க. இதனுள் ஏதேனும் ஒன்றில் சிறப்பும்மை தொக்கதாகவும் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The harnessed horses, chariots, elephants and carts
  2. covered the earth; the great banners in their multitude
  3. covered the sky; the vast dust that spread
  4. covered the eyes of the one on the lotus.

What the poem says

The poet conveys the size of the army in three strokes. Decked-out horses, chariots, elephants and wagons leave no ground visible; countless banners hide the sky; and the dust they raise rises so high that it blinds Brahmā himself, seated on his lotus in the highest heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṇiṉa puravi tēr pakaṭu paṇṭiyum
maṇṇiṉai maṟaittaṉa; malinta māk koṭi
viṇṇiṉai maṟaittaṉa; virinta māt tukaḷ
kaṇṇiṉai maṟaittaṉa, kamalat tōṉaiyē.