கம்பராமாயணம் 2345 · அயோத்தியா 10.27

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்து உளது , ஒல்லென் பேர் ஒலி ;
காசையில் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது , அவ் அனிக ராசியே .

பொருள் · Meaning in Tamil

‘ஒல்’ என் பேர் ஒலி - (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய) ‘ஒல்’ என்ற பெரிய ஆரவாரம்; ஈசன் - (அழித்தற் கடவுளாகிய) சிவன்; இவ் உலகினை அழிக்கும் நாள் - இந்த உலகினை அழித்துச் (சர்வ சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும் ஓசையின் - எழுகின்ற பேரோசையைவிட; நிமிர்ந்துளது - மேற்சென்றுளது; அவ் அனிகராசி - அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் - காயாம்பூப் போலும் கருநிறமுடைய இராமனை; காண மூண்டு எழும் ஆசையின் - காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்; நிமிர்ந்தது - மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

ஈசன் என்பது சிவனுக்குரிய சிறப்புப் பெயர். “ஈசன் ஆண்டிருந்த பேர் இலங்கு மால்வரை” (3360.) என்பது காண்க. காசை - காயாம்பூ. “நீல நெடுங்கிரியும் மழைமுகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் மேனிக், கோலமும்” (வில்லி. 45. 247.) என்பது திருமாலின் திருமேனி நிறத்துக்குக் காயாம்பூவை உவமை கூறிற்றாம். காசு - குற்றம் என்பார் உளர்; ‘காசை’ என வருதலின் அது பொருந்தாது. ‘காசில்’ என்று வரின் பொருந்தும். ‘காசில் கொற்றத் திராமன்’ என்பது (4) போல, காசு - ஐ எனப் பிரித்து ‘ஐ’ சாரியை என்றாலோ எனின், அவ்வாறு சாரியை கூறுவது ஓர் மரபின்மையே அன்றி வேறின்றி. ஏற்குமேற் கொள்க. ‘ஓசையின்’, ‘ஆசையின்’ இரண்டிடங்களிலும் ‘இன்’ உறழ்ச்சிப் பொருட்டு. ‘காசையின்’ ‘இன்’ உவமப் பொருட்டு. ‘ஏ’ காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Louder than the roar that rises on the day the Lord destroys this world
  2. rose the great tumultuous sound;
  3. higher than the longing that welled up to see the one dark as the kāyā flower
  4. rose that mass of the army.

What the poem says

The noise of the marching host is greater than the roar heard when Īcaṉ, Śiva the destroyer, dissolves the universe at the end of time.

And the army itself swells even beyond the eagerness rising in every heart to see Irāmaṉ, who is dark like the kāyā blossom, the flower traditionally compared to Viṣṇu's complexion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īcaṉ iv ulakiṉai aḻikkum nāḷ eḻum
ōcaiyiṉ nimirntuḷatu, olleṉ pēr oli;
kācaiyiṉ kariyavaṟ kāṇa mūṇṭu eḻum
ācaiyiṉ nimirntatu, av aṉika rāciyē.