கம்பராமாயணம் 2346 · அயோத்தியா 10.28

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெருங்கை வேழம் - (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய களிற்று யானைகள்; பிடியொடு - (தம்) பெண் யானைகளுடனே; படியொடு திருநகர் துறந்து - பூவுலக ஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும் விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம் நோக்கி - செடிகளோடு பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி; சீதை ஆம் கொடியொடு - சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த - நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என - அந்த மேக நிறனாகிய இராமன் போல; நடந்தன - நடந்து சென்றன.

யானைக்கு இராமனும், பிடிக்கும் பிராட்டியும் கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. ‘கொண்டல்’ என்பது இராமனுக்கு உருவகம். நிறத்தினால் அன்றிப் பயனாலும் (தன் அடைந்தோர்க்குத் தண்ணளி விளைத்தலால்) இராமனுக்கு மேகம் நேராகும். ‘உருவும் பயனும்’ பற்றிய உருவகம் ஆகும். ‘வேழமும் பிடியும்’, ‘மரமும் செடியும் தொடர் வனம்’, ‘சீதையாம் கொடியொடு நடந்த கொண்டல்’ என்று இவற்றை இணைத்துக் காட்டியது இன்புற வேண்டிய கவிநயம் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that cloud who gave up the earth and the splendid city
  2. and set out for the forest where many trees and shrubs crowd together,
  3. walking with the creeper that is Cītai,
  4. so the great-trunked bull elephants walked with their cows.

What the poem says

The bull elephants of the army walk beside their mates, and the sight recalls Irāmaṉ, the dark rain cloud, who gave up the kingdom and the beautiful city and walked into the dense forest with Cītai, slender as a creeper, at his side.

The bull stands for Irāmaṉ and the cow for Cītai. Irāmaṉ is called a cloud not only for his dark colour but because, like a rain cloud, he brings cool relief to all who come to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭiyoṭu tiru nakar tuṟantu, pal maram
ceṭiyōṭu toṭar vaṉam nōkki, cītai ām
koṭiyoṭu naṭanta ak koṇṭal ām eṉap
piṭiyoṭu naṭantaṉa peruṅ kai vēḻamē.