கம்பராமாயணம் 2347 · அயோத்தியா 10.29

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சேற்று இள மரை மலர் சிறந்த ஆம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்
ஏற்று , இளம் பிடி குலம் , இகலில் மெல் நடை
தோற்று , இள மகளிரைச் சுமப்ப போன்றவே .

பொருள் · Meaning in Tamil

சேற்று இள மரை மலர் - சேற்றின்கண் தோன்றுவன ஆகிய இளமையான தாமரை மலர்; சிறந்தவாம் என - எம்மைக் காட்டிலும் சிறந்தனவோ; என - என்று கேட்பது போல; கால்தளம் - பாதமாகிய மலரிதழ்; பொலிதரு - விளங்குகின்ற; கன்னிமாரொடும் - இளம் பெண்களுடனே; இளம் பிடிக்குலம் - இளைய பெண்யானைக்கூட்டம்; இன் நடை இகலி - இனிய நடையால் பகைத்து; ஏற்று - (எதிர்) ஏற்று; தோற்று - (நடை அழகில் அவர்கள் விஞ்சியபடியால்) தோல்வியடைந்து; (அதற்குத் தண்டனையாக) இள மகளிரைச் சுமப்ப போன்ற - இளம்பெண்களை (இப்போது) சுமந்து திரிவன போன்றன.

வென்றோரைத் தோற்றோர் சுமத்தல் இயல்பாதலின், இங்ஙனம் கற்பனை செய்தார். நடையழகில் மோதிப் பார்த்துத் தோல்வியடைந்த பெண் யானைகள் மகளிரைச் சுமத்தல் போல உள்ளது இச் சேனைகளின் இடையே இளம் பெண்கள் பிடிகளில் ஏறிச் செல்லும் காட்சி என்று தற்குறிப்பேற்றம் செய்தார். ‘எம்மினும் தாமரை மலர் சிறந்தனவோ’ என எள்ளி நகையாடுவது போலக் கால்தளம் பொலிகின்ற கன்னியர் என்பதும் ணன். வணி. மரைமலர் என்பது முதற்குறை. ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if asking, 'Are young lotuses of the mud finer than these?',
  2. with maidens whose petal-feet shone,
  3. the herds of young cow elephants, having challenged them in graceful gait
  4. and lost, seemed to carry the young women.

What the poem says

Young women ride in the procession on young cow elephants. Their feet are so lovely that they seem to mock the lotus, as if asking whether a flower born in mud could be finer.

The poet imagines that the elephants once challenged the women to a contest in graceful walking and lost. Since the loser carries the winner, the elephants must now bear the young women on their backs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēṟṟu iḷa marai malar ciṟantavām eṉak
kāl taḷam politaru kaṉṉimāroṭum
ēṟṟu, iḷam piṭikkulam, ikali iṉ naṭai
tōṟṟu, iḷa makaḷiraic cumappa pōṉṟavē.