கம்பராமாயணம் 2348 · அயோத்தியா 10.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேதனை - வருத்தத்தைத் தரும்; வெயிற்கதிர் தணிக்க - சூரியனால் ஆகிய வெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும் சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவி நின்று) மென்மழைச் சீதநீர் தொடு - மெல்லிய மேகங்களது குளிர்ச்சி பொருந்திய நீரைத் தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து); சென்றன - (சேனைகளின் இடையே) சென்றன வாகிய; வரம்பு இல் கோடி - கணக்கற்ற கோடியளவான; நெடுங்கொடியும் - நீண்ட கொடிகளும்; கோதை - கையுறை அணிந்த; வெஞ்சிலையவன் - கொடிய (கோதண்டம் எனப்பெறும்) வில்லை ஏந்திய இராமனது; கோலம் - பட்டாபிடேகக் கோலத்தை; காண்கிலா - காணப்பெறாத; மாதரின் - பெண்கள் போல; நுடங்குவ - அசைகின்றனவாயின.
கொடிகள் வானளாவி மேகத்தைத் தொடுவதும், அசைவதும் சேனைகளின் வெயில் வெம்மை தணிக்க மேகத்தின் குளிர்நீர் தெளிப்பதாகவும், இராமன் முடிசூடும் கோலம் காணாத மகளிர் என அசைவதாகவும் கற்பனை செய்யப்பெற்றன. தற்குறிப்பேற்றவணி, உவமையணி என முறையே காண்க. கோதை - கையுறை. விற்போர் செய்வார் கைகளுக்குத் தோலாற் செய்த உறை அணிவர். ‘ஏ’ காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To soften the painful rays of the sun, the tall banners
- that touch the cool water of the soft clouds went along too;
- countless millions of them swayed like women
- who had not seen the splendour of the one with the cruel bow and the archer's glove.
What the poem says
Countless tall banners move with the army. They reach so high that they seem to touch the soft clouds and draw down cool water to ease the marchers' suffering under the scorching sun.
They also flutter and droop like women grieving because they never saw Irāmaṉ, wearer of the archer's glove and wielder of the fierce bow, in his coronation finery.