கம்பராமாயணம் 2350 · அயோத்தியா 10.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓர் பரவை - (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்; தேர் மிசைச் சென்றது - தேர்மேல் சென்றது; ஓர் உவரி - (யானை வீரர்களாகிய) ஒரு சமுத்திரம்; செம்முகக் கார் மிசைச் சென்றது - சிவந்த (புள்ளிகளை உடைய) முகத்தை உடைய மேகம் (போன்ற யானை) மேல் சென்றது; கார்க்கடல் - கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை ஏகிற்று - அழகிய முகத்தை உடைய குதிரைகளின் மேல் சென்றது; பதாதிப் பௌவம் - காலாட் படை வீரர்களாகிய கடல்; பார்மிசை எங்கணும் படர்ந்தது - மண்ணின் மேல் எல்லா இடங்களிலும் படர்ந்து சென்றது.
வானத்திலிருந்து பூமிவரை நோக்குவார்க்கு, மேலே தேர் வீரர் கடலும், அடுத்து யானை வீரர் கடலும், அதன்கீழ்க் குதிரை வீரர் கடலும், மண்ணில் காலாள் வீரர் கடலும் என நாற்பெருங்கடல்கள் படிப்படியாய்த் தோன்றின என்பதாம் - சேனையின் மிகுதி கூறியவாறு. உருவக உயர்வு நவிற்சி அணி. ‘ஏ’ காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One ocean went upon chariots; one sea
- went upon red-faced clouds; a dark ocean
- went upon handsome-faced horses; and everywhere
- over the earth spread the sea of foot soldiers.
What the poem says
The four divisions of the traditional army are each pictured as an ocean: one sea of chariot warriors, one of men riding elephants, which are dark clouds with red-spotted faces, one of horsemen, and one of foot soldiers flooding the ground.
Seen from above they form four great seas stacked one over another, a metaphor joined with hyperbole to show the army's vastness.