கம்பராமாயணம் 2353 · அயோத்தியா 10.35

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அதிர் கடல் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம் அனைத்தும் - உலகம் முழுவதையும்; காத்தவன் - (நீதி வழுவாது) காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு - மரபுவழியில் பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை - ஒப்பற்ற வெண்கொற்றக்குடை; மீது இலா - மேலே பிடிக்கப்படாது உள்ள; படை - அச்சேனை; பொதி பல கவிகை மீன் - நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்) வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் - வானம் எங்கும் நிரம்பித் தோன்றின ஆயினும்; கதிர் மதி - ஒளியுடைய சந்திரன்; நீங்கிய கங்குல் - இல்லாத இரவை; போன்றது -.

மன்னர்கள் குடைக்குத் தாரகைகளும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடைக்குச் சந்திரனும் உவமையாம். விண்மீன்கள் பூத்திருப்பினும் சந்திரன் இல்லாத ஆகாயம் பொலிவழிந்திருத்தல் போல, வெண்குடைகள் பல நடுவே தோன்றினும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடை இல்லாமையால் சேனை பொலிவழிந்து தோன்றியது என்க. விதி - முறைமை. இங்கே மரபு வழியில் சூரிய குலத்தார்க்கு உரியதாய் வருவது. ‘கவிகை மீன்’ உருவகம். ‘ஏ’காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The army, without above it the single rightful parasol
  2. of him who protected the whole world girt by the roaring sea,
  3. though it blossomed with many crowded parasols like stars,
  4. was like a night from which the bright moon has gone.

What the poem says

Many kings march with the army, each under his own white parasol, so that the host seems spangled with stars. But the single white parasol of state that belonged to Tacarataṉ, protector of the whole sea-girt world, is missing.

So the army looks like a night full of stars but without the moon, its glory dimmed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atir kaṭal vaiyakam aṉaittum kāttavaṉ
viti varum taṉikkuṭai mītu ilāp paṭai,
poti pala kavikai mīṉ pūttatu ākilum
katir mati nīṅkiya kaṅkul pōṉṟatē