கம்பராமாயணம் 2354 · அயோத்தியா 10.36

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1செல்லிய செலவினால் , 'சிறிய திக்கு ' எனச்
சொல்லிய சேனையைச் சுமந்தது ஏ எனில் ,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை , 'ஓர்
மெல்லியல் ' என்றவர் மெய்யரே கொலாம் ?

பொருள் · Meaning in Tamil

செல்லிய செலவினால் - பரந்து செல்கின்ற செல்கையால்; “திக்கு சிறிய” - திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய சேனையை - என்று பிறரைச் சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச் சேனையை; சுமந்தது எனில் - (இந்தப் பூமி) சுமந்து கொண்டுள்ளது என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை - ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல் - மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர் கொல் - மெலியர்போலும்.

‘பூதேவி - நிலமகள்’ என்று சொல்லும் வழக்குப் பற்றியது. “நிலம் என்னும் நல்லாள்” என்றார் (குறள். 1040.) வள்ளுவரும். மெல்லியல் பெருஞ்சுமையைத் தாங்க மாட்டாள் ஆதலின், பூமியை மெல்லியல் என்றல் பொருந்தாது என்று சமத்காரமாகக் கூறிச் சேனையின் மிகுதியைப் புலப்படுத்தினார். ‘ஏ’ காரங்கள் அசை. ‘கொல்’ ஐயப்பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If she has borne the army of which it was said, as it marched,
  2. 'the directions are too small for it',
  3. then those who called the earth, clothed in the roaring sea, 'a
  4. delicate woman', must themselves have been the weak ones!

What the poem says

The earth is traditionally pictured as a goddess, a woman wearing the ocean as her garment, and poets call her delicate.

But the army is so vast that people say the four directions are too small to hold it. If the earth can carry such a load, the poet jokes, then those who called her a frail woman must be the feeble ones. It is a playful way of stressing the size of the host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1celliya celaviṉāl, 'ciṟiya tikku ' eṉac
colliya cēṉaiyaic cumantatē eṉil,
olloli vēlai nīr uṭutta pārai, 'ōr
melliyal ' eṉṟavar meliyarēkolām?