கம்பராமாயணம் 2371 · அயோத்தியா 10.53

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
--

பொருள் · Meaning in Tamil

தாயரும் - (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்; அருந்தவத்தவரும் - செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும், தந்தையின் ஆய மந்திரியரும் - தன் தந்தையாகிய தயரதன் கண் பொருந்திய மந்திரிமார்களும், அளவுஇல் சுற்றமும் - அளவிட முடியாத பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் - தூய்மையான வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர - தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர; திருநகர்ப் புரிசை வாயில் போயினன் - அழகிய அயோத்தி நகரத்து மதிலின் (முதன்மையான வாயிலைச் சென்றடைந்தான்.

தந்தை போலப் பாராட்டத் தகும் மந்திரியர் என்றும் ஆம். அளவில் சுற்றம் - உறவினர்களையும், அரசச் சுற்றத்தையும் குறிப்பிடும். இராமனை அழைத்து வருதலில் அனைவர்க்கும் உள்ள ஆர்வ மிகுதி இதனால் புலப்படும். 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the mothers, the sages of hard penance, his father's
  2. ministers, kinsfolk beyond count
  3. and pure brahmins following and thronging round him,
  4. he went to the gateway in the walls of the fair city.

What the poem says

Paratan reaches the main gate of Ayōttī with everyone following him: the queens Kōcalai, Kaikēyi and Cumittirai, the great sages, his father Tacarataṉ's ministers, his relatives and the court, and the brahmins.

That they all came out shows how much everyone wants to bring Irāmaṉ home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāyarum, arun tavattavarum, tantaiyiṉ
āya mantiriyarum, aḷavu il cuṟṟamum,
tūya antaṇarkaḷum, toṭarntu cūḻvarap
pōyiṉaṉ -- tiru nakarp puricai vāyilē.