கம்பராமாயணம் 2373 · அயோத்தியா 10.55

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
' ''

பொருள் · Meaning in Tamil

ஐய! - சத்துருக்கனனே!; “முன்னையர் முறைகெட - (நம் குலத்து) முன்னோர்களின் முறைமை சிதைய; முடித்த பாவியை - (வரத்தின் மூலமாகத்) தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட (என் தாயாகிய) பாவியை; சின்ன பின்னம் செய்து - கண்டதுண்டம் செய்து; என் சினத்தைத் தீர்வெனேல் - என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேனானால்; என் ஐயன் - என் தலைவனாகிய இராமன்; இன்று என்னைத் துறக்கும் - இன்றே என்னைத் தம்பியல்லன் என்று துறந்துவிடுவான்; என்று அலால் - என்றுகருதி அதனால் அமைதியாக இருந்தேனே அல்லாமல்; (இவளை) “அன்னை” என்று நான் உணர்ந்திலென் - 'தாய்' என்று கருதி நான் அமைதியாக இருந்தேனில்லை; என்றான் -.

“ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ” என்ற பரதன் கூற்றை (2173) இங்கு ஒப்பிடுக. கூனியைப் போலன்றித் தன்தாய் கைகேயி, நடந்த அவலங்களுக்கு நேரடிக் காரணம் ஆகவும் அவளைக் கொல்லாது இதுகாறும் நின்றது இராமன் மனத்துக்கு உவப்பாய் இராது அச்செயல் என்பதனாலேயே ஆம் என்றான் பரதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If I were to hack to pieces the sinful woman who brought about her end
  2. so that the custom of our forefathers was ruined, and so slake my anger,
  3. my lord would cast me off this very day — that alone held me back;
  4. never, brother, did I think of her as my mother,' he said.

What the poem says

Paratan tells Catturukkaṉaṉ why he himself has not killed Kaikēyi, his own mother, who is the real cause of the disaster: through her boons she overturned the ancestral rule that the eldest son inherits the throne.

It was not because she is his mother. It was only because Irāmaṉ would be angry and would disown him as a brother. He said the same thing earlier, when he first learned what she had done.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''muṉṉaiyar muṟai keṭa muṭitta pāviyaic
ciṉṉapiṉṉam ceytu eṉ ciṉattait tīrveṉēl,
'eṉṉai iṉṟu eṉ aiyaṉ tuṟakkum ' eṉṟu alāl,
'aṉṉai ' eṉṟu uṇarntileṉ aiya! nāṉ '' eṉṟāṉ.