கம்பராமாயணம் 2374 · அயோத்தியா 10.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கோது இலா அருமறை குலவும் நூல்வலாய்! - குற்றம் இல்லாத அரிய மறை பொருள்களைத் தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில் தேர்ச்சி பெற்றவனே; அந்தம் இல் வேதனைக் கூனியை - முடிவில்லாத வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை; வெகுண்டும் என்னினும் - மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்; ஐயன் முனியும் ஆதலால் - இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்; என்று - என்று கருதி; நாம் போதும் - நாம் அவளை விட்டுப் போவோம்; என்று அரிதின் கொண்டு - என்று சொல்லிச் சிரமப்பட்டு (அவனைத் தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான் - சென்றான்.
வெகுண்டும் - கோபித்தோம்; தன்மைப் பன்மை வினைமுற்று. வேதம் வல்ல நீ ஓர் அடிச்சியின் பொருட்டுச் சினம் கோடல் தகுதி அன்று என்று குறிப்பித்தானாம்; என்றது பரதன் தாயைச் ப்ட் விட்டதற்கு மேற்குறித்த காரணத்தைச் சுட்டியது எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Therefore, since our lord would be angry — though we are enraged
- at the hunchback who caused this endless anguish —
- you who are skilled in the flawless, rare scriptures and their lore,
- let us go,' he said, and with difficulty led him away.
What the poem says
Paratan finishes his appeal. They both hate Mantarai for the unending misery she has caused, but Irāmaṉ would be displeased if she were harmed, so they must leave her alone.
By calling his brother learned in the Vedas, he hints that it is beneath such a man to rage at a mere servant woman. With some effort he draws Catturukkaṉaṉ away.