கம்பராமாயணம் 2376 · அயோத்தியா 10.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பரதன்) அல் - இரவில்; நெடுங்கண் அணை நீர் அருவி ஆடினன் - (தன்) நீண்ட கண்களிலிருந்து வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் - மலையில் விளையும் கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய - வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த; புல்லணை மருங்கில் - புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்; தான் -; பொடியின் - மண்புழுதியின்கண்; வைகினான் - தங்கியிருந்தான்.
இராமனைப் போலவே தன்னையும் அத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுத்திக்கொள்ளும் மனநிலையில் பரதன் உண்ணாமல் உறங்காமல் புல்லணைப் பக்கலில் மண்ணில் தங்கினான் ஆம். இராமன் புல்அணையில் தங்கலை “எம்பிரான் புல் அணை வைக” என்ற (4276) இலக்குவன் கூற்றாலும் உணர்க. இரவில் கண்ணீர் அருவி ஆடினன் என்பதால் உறங்காமலும் இருந்தான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the night he bathed in the waterfall of his long eyes' tears;
- he ate not even the roots and fruits that grow among the rocks;
- beside the bed of grass where the hero, whose high shoulders the bow embraces, had lain,
- he lay down himself, in the dust.
What the poem says
Paratan finds the bed of grass Irāmaṉ slept on. He will not lie on it. He lies in the dust beside it.
He eats nothing, not even the forest roots and fruit Irāmaṉ himself now lives on, and spends the night "bathing in a waterfall" of his own tears, which means he does not sleep at all. He is choosing to share his brother's hardships.