கம்பராமாயணம் 2380 · அயோத்தியா 11.3

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடி மிசைத் தூளி , புக்கு , அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ; ஓர் முறைமை தேர்ந்து இலேம் ;
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே .

பொருள் · Meaning in Tamil

அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின் அடியின் மேல் எழுந்த தூசி (அமரருலகத்தில்) புகுந்து; அடைந்த தேவர்தம் - அங்கே உள்ள தேவர்களது; முடி உற - தலைமீது படும்படி; பரந்தது - (தேவருலகு முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமை தேர்ந்திலெம் - ஒரு தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்) ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு விட்டு (நீரைப் பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே - குதிரைத் தொகுதிகளே. (வேறில்லை)

புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை முழுக்காட்டிய செய்தி நாம் அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும் நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றது குதிரைப் படையின் மிகுதி கூறியவாறு. 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The dust raised by their hooves went up and spread till it settled
  2. on the crowns of the gods who dwell there — that one thing we could not make sure of;
  3. but those that drank with long, heavy breaths, those that stood swimming,
  4. and those that rolled about in the dust — all were troops of horses.

What the poem says

Now the cavalry. The poet half-jokingly says he cannot vouch for whether the dust kicked up by the horses rose to heaven and powdered the crowns of the gods; a mortal cannot check that.

What he can say is what anyone at the riverbank saw. Everything drinking with deep snorts, swimming in the water or rolling in the dust was a horse, and nothing else could be seen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭimicait tūḷi, pukku, aṭainta tēvartam
muṭi uṟap parantatu; ōr muṟaimai tērntilem;
neṭitu uyirttu uṇṭavum nīnti niṉṟavum
poṭimicaip puraṇṭavum puravi īṭṭamē.