கம்பராமாயணம் 2381 · அயோத்தியா 11.4

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாலை ஏய் நிறம் அத்து ஒடு பண்டு தான் படர் ,
ஓலை ஏய் நெடுங்கடல் ஓடிற்று இல்லை ஆல் ;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம்
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே .

பொருள் · Meaning in Tamil

அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு; பாலை ஏய் நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான் பண்டு படர் - தான் முன்பு சென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல் - ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று இல்லை - சென்று கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி - பூமாலை பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; மன்னன் சேனை ஆம் வேலையே - பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது.

பரதனது சேனைக்கடல் வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப் பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே, கடலில் கங்கை கலக்கவில்லை என உயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக் காட்டினார். ஓல் - ஒலி மிகுதி. “பாலை ஏய் நிறத்தொடு.... ஓடிற்றில்லை” என உரைத்து மதநீர்ப் பெருக்குக் கலந்தலாலும், சேனை மிகுதி உழக்கலாலும் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர். பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை அறிக. கடலினும் சேனைமிகுதி என்பது கூறியதாம், யானை, குதிரை மிகுதி கூறினார்; இப்பாடலால் காலாட்படையின் மிகுதி கூறினார் என்றலும் ஒன்று. ஆல், 'ஏ' அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With its milk-white colour, as it used to flow of old,
  2. it never ran into the long, roaring sea;
  3. for the ocean that was the army of the king with the garlanded high crown
  4. drank it all up — that flood of the Gaṅgā.

What the poem says

Having described the elephants and horses, the poet turns to the foot soldiers. The marchers are so many, and so thirsty after the road, that they drink the whole Gaṅgā. For once the milk-white river never reaches the sea, because Paratan's army, a sea in its own right, has swallowed it first.

The commentary rejects another reading, that the river reached the sea discoloured by must and mud, since the verse plainly says the army drank it. This is deliberate hyperbole.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pālai ēy niṟattoṭu paṇṭu tāṉ paṭar,
ōlai ēy neṭuṅ kaṭal ōṭiṟṟu illaiyāl;
mālai ēy neṭu muṭi maṉṉaṉ cēṉai ām
vēlaiyai maṭuttatu ak kaṅkai veḷḷamē.