கம்பராமாயணம் 2382 · அயோத்தியா 11.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கான் தலை நண்ணிய - காட்டிடத்திற் சென்ற; காளை பின்படர் - இராமன் பின்னே (இராமனை நாடிக் சென்ற; தோன்றலை - பரதனை; அவ்வழி - அந்த வழியிலே; தொடர்ந்து சென்றன - பின்பற்றிச் சென்ற சேனைகள்; முற்றும் -; ஆன்றவர் உணர்த்திய - பெரியோர்களால் கணக்கிட்டு உணர்த்தப்பெற்ற; மூன்று பத்து ஆயிரத்து இரட்டி - அறுபதினாயிரம்; அக்குரோணிகள் - அக் குரோணிகள் ஆகும்.
அக்குரோணி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத் தெண்ணூற்றெழுபது (21870), தேர் இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது (21870), குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள் இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (109350) ஆக இரண்டு இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர் அக்குரோணி. இப்படி அறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன் சென்றன என்க. மகாசக்கரவர்த்திகளுக்கு எல்லாம் அறுபதினாயிரம் என்றல் நூல் மரபு என்பர். அக்குரோணி - அகெளஹிண என்னும் வடசொற் சிதைவு என்பர். 'ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Following the prince who went after the young bull
- who had gone into the forest, along that road went,
- as the learned have reckoned it, akkurōṇis
- numbering three times ten thousand, doubled — all of them.
What the poem says
The poet gives the size of Paratan's army: sixty thousand akkurōṇis, all following him as he follows Irāmaṉ, the "young bull", into the forest.
An akkurōṇi (Sanskrit akṣauhiṇī) is a standard army unit of 21,870 elephants, 21,870 chariots, 65,610 horses and 109,350 foot soldiers, 218,700 in all. Sixty thousand is the conventional figure for the army of an emperor.