கம்பராமாயணம் 241 · பால 5.73

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனைக்,
குண்டிகை குடை ஒடு குலவு நூல் முறைத்
தண் ஒடு பொலிதரு தட கையான் தனை.

பொருள் · Meaning in Tamil

அண்டர்கள் துயரமும் - தேவர்களது (இதுவரை நீக்கப்படாத) துயரமும்; அரக்கர் ஆற்றலும் - அரக்கர்களது (இதுவரை எவராலும் வெல்லப்படாத) வலிமையும்; விண்டிடப் பொலிதரு வினைவலாளனை - விட்டு நீங்குவதற்குக் காரணமாக விளங்கும் செயல்திறம் வல்லவனை; குண்டிகை குடையொடும் குலவு நூல் முறைத் தண்டொடும் பொலிதரு - கமண்டலம் குடைகளுடன் பொருந்திய நூல் முறைப்படி அமைந்த யோகதண்டத்துடனும் விளங்கிய; தடக்கையான் தனை - தடக்கைகளையும் உடையவனை.

முன்பாட்டில் கூறிய சுற்றிய சீரைக்குத்தக, குண்டிகை, குடை பொருந்திய கைகளையும், நூல் முறைத் தண்டொடும் பொலிதரு தடக்கையினையும் உடையவனாகத் திகழ்ந்தான் என்கிறார். “அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும் ஏக காலத்தில் விண்டிடப் பொலி தருவினை” யாதெனின் ராமாவதாரத்துக்குக் காரணமாகவுள்ள வேள்வியை நிறைவேற்றுதலாகிய தொழில் என்க. குண்டிகை: கமண்டலம். குடை: உட்குடைவுள்ளதால் இப்பெயர் பெற்றது. தண்டு: யோக தண்டத்தைக் குறிக்கும் (திரிதண்டம்). தடக்கை: நீண்ட கை. நூல்: சமய நூல்கள்.

பிறங்குவான்தனை, மூர்த்தியான் தனை, வினைவல்லாளனை, தடக்கையான் தனை “கண்களால் எதிர்ந்தனன்” என்பது கொண்டு பொருள் முடிவுபெற்றதாயிற்று

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him who shone, skilled in the deed by which the grief of the gods
  2. and the strength of the rākṣasas would both be broken;
  3. him whose large hands shone with water-pot and umbrella
  4. and with the staff held as the scriptures prescribe.

What the poem says

The description continues. The 'deed' the sage is skilled in is the sacrifice that will lead to Irāmaṉ's birth, which at one stroke will end the gods' suffering and the demons' power.

He carries the ascetic's water pot, umbrella and the triple staff of a renunciant. All of these descriptions are objects of 'beheld' two verses earlier.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭarkaḷ tuyaramum arakkar āṟṟalum
viṇṭiṭap politarum viṉai valāḷaṉai,
kuṇṭikai kuṭaiyoṭum kulavu nūl muṟait
taṇṭoṭu politaru taṭak kaiyāṉtaṉai.