கம்பராமாயணம் 242 · பால 5.74

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேந்தர்தம் வேந்தன் - மன்னர்களுக்கு மன்னனாகிய தயரதன்; ஆண்டு இரதம் இழிந்து போய் - (முனிவனைக் கண்ட) அந்த இடத்திலேயே தேரை விட்டுக் கீழே இறங்கிச் சென்று; இணைகொள் தாள் மலர் விழுந்தனன் - அம்முனிவனது தாமரை போன்ற இரண்டு பாதங்களிலும் வீழ்ந்து வணங்கினான்; முதிய நான்மறைக் கொழுந்து மேல்படர்தர - பழமையான வேதங்களாகிய கொழுந்துகள் வளர்ந்து படர; கொழு கொம்பு ஆயினான் - (கொடி செழித்து வளர்ந்து தன் மீது படர) ஏற்றுக்கொள்ளும் கொழு கொம்பு போன்ற அம்முனிவன்; மெய்ம்மையால் ஆசிகள் மொழிந்தனன் - மெய்நெறிப்படியே மன்னனுக்கு ஆசி மொழிகள் கூறியருளினான்.

இழிதல்: இறங்குதல். ஆண்டு: முனிவனைக் கண்ட அவ்விடத்தில். இணைகொள்: இரட்டையான. தாள்மலர்: உருவகம். விழுந்தனன்: வணங்கினான். நான்மறை: கொடி. அவை கூறியுள்ள மந்திரங்கள்: கொழுந்து. அக்கொடி படர்தற்குரிய கொம்பு: முனிவர். இரதம் இழிந்து, தாள் மலர் விழுந்தனன்; நான்மறை படர்தரக் கொழு கொம்பாயினான் ஆசிகள் மொழிந்தனன் என்க. வேதங்கள் மிகப் பழமை வாய்ந்தவை யாதலின் முதிய நான்மறை என்றார். 'மெய்மையால்' என்பதற்கு 'நீர்மையால்' என்பதொரு பாடமுண்டு. நீர்மை: முறைமையாகும். முறைப்படி ஆசி கூறினான் என்பது அப்பாடத்துக்குப் பொருளாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Stepping down from the chariot there, onto the paired flower feet
  2. fell the king of kings; and truly
  3. the sage spoke blessings, he who had become the supporting pole
  4. on which the shoots of the ancient four Vedas climb and spread.

What the poem says

Tacarataṉ alights and falls at the sage's feet, and the sage blesses him.

The four Vedas are imagined as a creeper whose tender shoots, their mantras, climb and spread on the sage as on a supporting pole. The commentary notes a variant reading, 'by due custom' instead of 'truly'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻintu pōy iratam āṇṭu iṇai koḷ tāḷ malar
viḻuntaṉaṉ vēntartam vēntaṉ; meymmaiyāl
moḻintaṉaṉ ācikaḷ, mutiya nāṉmaṟaik
koḻuntu mēl paṭartarak koḻukompu āyiṉāṉ.