கம்பராமாயணம் 2441 · அயோத்தியா 11.64

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

குகன் -; சுற்றத்தார் - உறவினர்கள்; தேவரொடும் - தேவர்களோடு; தொழ - வணங்குமாறு; நின்ற கோசலையைத் தொழுது நோக்கி - இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து; “கொற்றத் தார்க் குரிசில்! - வெற்றிமாலை சூடிய பரதனே!; இவர் ஆர்?” என்று வினவ - இவர் யாராவார் என்று கேட்க; (அதற்குப் பரதன்) “கோக்கள் வைகும் முற்றத்தான் - அரசர்கள் (திறை தரக் குழுமித்) தங்கியிருக்கும் முன்றிலை உடைய தயரதனது; முதல் தேவி - முதல் பட்டத்தரசி; மூன்று உலகும் ஈன்றானை - மூவுலகங்களும் (முன்பு) உண்டாக்கிய பிரமதேவனை; முன் ஈன்றானை - முன்னால் (தனது திருஉந்திக் கமலத்தில் தோற்றுவித்தருளிய (ஸ்ரீ நாராயணன் திரு அவதாரமாகிய) இராமனை; பெற்றதால் பெறுஞ் செல்வம் - (தன் மகனாகப்) பெற்ற காரணத்தால் பெறவேண்டிய அரசச் செல்வத்தை; யான் பிறத்தலால் - நான் (கைகேயி மகனாகப் பின்னே) பிறந்த காரணத்தால்; துறந்த - இழந்த; பெரியாள் - பெருமையுடையாள்;” என்றான் -.

கோசலையின் முன்னைய 'அரசன் தாய்' என்ற நிலையும், இப்போதைய நிலையும் தன் மனத்தைத் துன்புறுத்தத் தன்னை நொந்து பரதன் குகனுக்கு விடை கூறினன் என்க. சக்கரவர்த்தி தயரதன் ஆதலின் அரசர்கள் அவனைக் கண்டு வணங்கவும் திறை செலுத்தவும் எப்போதும் திருமுற்றத்தே காத்திருப்பர். 'பெற்றதால்' எதுகை நோக்கி, 'பெற்றத்தால்' என விரித்தல் விகாரம் ஆயிற்று; செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. தொழுது நோக்கி 'இவர் யார்?' என்று வினாயினன் குகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing to Kōcalai, who stood there worshipped by her kin and by the gods, and looking at her,
  2. Kukaṉ asked, 'Prince of the victor's garland, who is this?' He answered: 'The first queen
  3. of him in whose courtyard kings wait; she who bore the one who long ago bore him who bore the three worlds,
  4. and who, because I was born, has lost the wealth she should have gained by bearing him — a great lady.'

What the poem says

In the boat Kukaṉ bows to Kōcalai, Tacarataṉ's chief queen, whom even the gods revere, and asks Paratan who she is.

Paratan's answer is full of reverence and self-blame. She is the first queen of the emperor at whose gates kings wait with tribute. She is the mother of Irāmaṉ, who as Vishnu once brought forth from his navel Piramaṉ, maker of the three worlds. And she has lost the royal glory that should have been hers as Irāmaṉ's mother, only because he, Paratan, was born.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟattār tēvaroṭum toḻa niṉṟa kōcalaiyait toḻutu nōkki
'koṟṟat tārk kuricil! ivar ār? ' eṉṟu kukaṉ viṉava 'kōkkaḷ vaikum
muṟṟattāṉ mutal tēvi, mūṉṟu ulakum īṉṟāṉai muṉ īṉṟāṉaip
peṟṟattāl peṟum celvam yāṉ piṟattalāl tuṟanta periyāḷ ' eṉṟāṉ.