கம்பராமாயணம் 2443 · அயோத்தியா 11.66

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நைவீர் அலீர் மைந்தீர் ! இனித் துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே ? விலங்கல் திண் தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடு கலந்து நீங்கள்
ஐவீரும் ஒருவீராய் , அகல் இடத்தை நெடுங்காலம் அளித்திர் என்றாள் .

பொருள் · Meaning in Tamil

(அதுகேட்ட கோசலை அவர்களைப் பார்த்து); “மைந்தீர்! - என் பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் - இனிமேல் நீங்கள் துன்பத்தால் வருந்தாமல் இருப்பீர்களாக; மெய்வீரர் - சுத்த வீரர்களாகிய இராம இலக்குவர்கள்; நாடு இறந்து - கோசல நாடு கடந்து; காடு நோக்கி - வனத்தை நோக்க; பெயர்ந்ததுவும் - புறப்பட்டுச் சென்றதுவும்; நலம் ஆயிற்று ஆம் அன்றே! - (இத்தகைய சிறந்த சகோதரனைத் தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல் திண்தோள் கை வீரக் களிறு அனைய காளை - மலை போன்ற வலிய தோளை உடைய துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் - இந்தக் குகனோடும், கலந்து - ஒன்றுபட்டு; நீவிர் ஐவீரும் - நீங்கள் ஐந்து பேரும்; அகல் இடத்தை - அகன்ற பூமியை; நெடுங்காலம் - நீண்டகாலம்; அளித்திர்” - அரசாட்சி செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள் - என்று சொன்னாள்.

'மைந்தீர்!' என்ற விளி பரத சத்துருக்கனர்களை நோக்கியது; குகனையும் உள்ளடக்கிக் கூறலும் ஒன்று. இதுகாறும் இராமன் வனம் புகுந்தது கொடிது என்று அனைவரும் கருதினர் ஆதலால், குகன் என்கின்ற சிறந்த துணைவனை அச்செயல் தந்தபடியால் (கைகேயி செய்த அச் செயலும் நல்லதாயிற்று அன்றோ என்றாளாம். இது குகனைப் பாராட்டி உரைத்தது. 'ஐவீரும் ஒருவீராய்' என்றது குகனை ஆசி கூறியதாக அமையும். 'ஐவீரும்' என்று குகனுக்கே கோசலையால் இவ்வாசி கிடைத்தது என்பது உணரற்பாலது. இராமனைக் காட்டுக்கு அனுப்பியதில் கைகேயிமாட்டுக் குகனுக்கு இருந்த சீற்றத்தையும் கோசலை இதனால் மாற்றித் தேற்றினள் என்னலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Grieve no more, my sons! Now that those true heroes have left the land
  2. and turned toward the forest, has it not proved a blessing after all?
  3. Joined with this young bull, like a mighty war elephant with hill-strong shoulders,
  4. may all five of you, as one, protect the wide earth for a long age,' she said.

What the poem says

Kōcalai, the queen who has suffered most, finds a blessing in the sorrow. Irāmaṉ's exile, which everyone has seen as pure disaster, has given her sons a new brother, Kukaṉ, strong as a war elephant.

She blesses all five brothers to rule the world together, as one, for a long time. In doing so she accepts Kukaṉ as a son, and the commentary suggests she may also be easing his anger against Kaikēyi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naivīr alīr maintīr! iṉit tuyarāl nāṭu iṟantu kāṭu nōkki
mey vīrar peyarntatuvum nalam āyiṟṟu ām aṉṟē? vilaṅkal tiṇtōḷ
kai vīrak kaḷiṟu aṉaiya kāḷai ivaṉ taṉṉoṭum kalantu nīvir
aivīrum oruvīr āy, akal iṭattai neṭuṅ kālam aḷittir eṉṟāḷ.