கம்பராமாயணம் 2444 · அயோத்தியா 11.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை - அறக்கடவுளே என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை; நோக்கி - (குகன் பார்த்து; “ஐய! - பரதனே!; அன்பின் நிறைந்தாளை - அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை” - (யார் என்று எனக்குச் சொல்; என்ன - என்று கேட்க; (பரதன்) “நெறி திறம்பா - சத்திய வழியில் சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை - தன் வாய்மையை; நிற்பது ஆக்கி - என்றும் நிலைபெறுவதாகச் செய்து; இறந்தான்தன் - தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகிய தயரதனது; இளந்தேவி - இளைய பட்டத்தரசியாவாள்; (அதன் மேலும் இவள்) யாவர்க்கும் - எல்லா மக்களுக்கும்; தொழுகுலம் ஆம் இராமன் - வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு பிறந்தானும் உளன் என்ன - பின்னே பிறந்த தம்பியும் (ஒருவன்) உளன் என்று அனைவரும் அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை - (இராமனை விட்டு) நீங்காத இலக்குவனை; பயந்த - பெற்றெடுத்த; பெரியாள்” - பெருமை உடையவள்; என்றான் - என்று சொன்னான்.
சுமித்திரை இலக்குவனுக்கு “ஆகாததன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி, மாகாதல் இராமன் நம் மன்னவன்.... தாயர் சீதை என்றே ஏகாய்” என்றும், “மகனே இவன்பின் செல் தம்பி என்னும்படி அன்று; அடியாரின் ஏவல் செய்தி” (1751, 1752) என்றும் அறவுரைகளை அறிந்து கூறியவள் ஆதலின் அறத்தின் வடிவம் எனப்பட்டாள். பின்பு பிறந்தார் மூவராயினும் பரதனும் சத்துருக்கனனுமாகிய தாம் இராமனுக்குத் துன்பம் உண்டாகக் காரணமானோமே என்ற ஏக்கறவால், 'பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான்' என்று இலக்குவனைச் சிறப்பித்தான். குகன் இலக்குவனை அறிந்து, அவனையே இராமனாகக் கருதி, “தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்” (1963) என்று முன்னர்க் கூறியவன் ஆதலின் அவனை வைத்துச் சுமித்திரையை அறிமுகப்படுத்தினான் பரதன். அருகிருக்கும் சத்துருக்கனனும் அவள் மகன் ஆயினும் அவன் தன்னைச் சார்ந்திருந்துவிட்டபடியால் இலக்குவனைப் பெற்றதையே அவள் பெருமையாகக் குறித்தானாம். இவையனைத்துமே பரதன் சொல்லிலும் செயலிலும் தன்னிரக்கத்தைப் பெரிதும் காட்டுவனவாய் அமைகின்றன. 'பெரியாள்' என்று கோசலைக்குக் கூறிய பெயரையே இங்கும் கூறியது கொண்டு கம்பர் வாக்கின் அருமை அறிந்து மகிழலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at the one who stood beside them like Dharma itself, he said, 'Sir, tell me
- of this lady so full of love'; and he answered: 'She is the younger queen of him who,
- making his truth that never strayed from the path stand firm forever, died; she is the great lady
- who bore the one who never leaves Irāmaṉ, so that all may say: Irāmaṉ, whom all worship, has a younger brother too.'
What the poem says
Kukaṉ next asks about Cumittirai, who stands nearby like righteousness itself. When Ilakkuvaṉ left for the forest she told him to treat the forest as Ayōttī, Irāmaṉ as his father and Cītai as his mother, and to serve Irāmaṉ like a slave rather than a brother.
Paratan calls her the younger queen of Tacarataṉ, who kept his word to the end and died for it, and the mother of Ilakkuvaṉ. He says that because Ilakkuvaṉ never leaves Irāmaṉ's side, the world can say Irāmaṉ truly has a younger brother. He implies, with self-reproach, that he and Catturukkaṉaṉ do not count.