கம்பராமாயணம் 2445 · அயோத்தியா 11.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பின்னர்க் குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக - தன் கணவனாய தயரதன் (இறந்தாரைச் சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல; தோன்றல் - (தன் மகனாகிய) பரதன்; துயர்க் கடலின் ஏக - துன்ப வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி - அருட்கடலாகிய இராமன்; கடுமை ஆர் கானகத்து ஏக - கொடுமை பொருந்திய காட்டிடத்தே செல்ல; (இவ்வாறு செய்து) கழல்கால் மாயன் - கழலணிந்த காலையுடைய திருமால்; நெடுமையால் - (வாமனனாக வந்த மாவலி)பால் மூவடி மண் கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்; அன்று - முற்காலத்தே; அளந்த உலகு எல்லாம் - மூவடியில் ஈரடியால் அளந்த எல்லா உலகங்களையும், (திருமால் போல அவதாரம் எடுத்துச் சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாளை - தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற கொடுமையினால் (எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை; “ஆர் இவர் என்று உரை” என்ன - இவர் யார் என்று சொல்லுக என்று கேட்க; குரிசில் - பரதன்; கூறும் - சொல்வான் ஆயினன்.
'சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலை' என்று கோசலையையும், 'அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்' என்று சுமித்திரையையும் கூறிய கம்பர் ஒரு பாடல் முழுதுமாகக் கைகேயியின் கொடு மனத்தைக் கூறிப் பரதனுக்கும் மேலாகத் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தினார் எனலாம். 'இவர் யார்' என்று கோசலையை வினாவி, 'அன்பின் நிறைந்தாளை உரை' என்று சுமித்திரையை வினாவிய குகனை 'ஆர் இவர்' என்று சுட்டின்முன் வினாவை வைத்து வினாவச் செய்த கம்பரின் சொல்நயம் உணரத்தக்கது. மற்றவரோடு அவள் இசைவொட்டாது நின்றபடியைக் குகன் கண்டுகொண்டதை இந்த வினா வேறு பாடு காட்டி நிற்கும். திருமால் மிக அரிது முயன்று செய்த செயலை இவள் எளிதாகச் செய்தாள் என்றார் கம்பர். இராமாவதார நோக்கத்தை நிறைவேற்றியவள் அவள் அன்றோ என்பதை நினைத்தார் போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She who sent her husband to the burning ground, her son into a sea of grief,
- and the ocean of compassion into the cruel forest — she who measured,
- by the cruelty she planned within her own mind, all the worlds the anklet-footed Māyaṉ
- once measured with his towering form — 'Who is this? Tell me,' he said; and the prince replied.
What the poem says
The third queen is Kaikēyi, and the poet spends the whole verse on her before Kukaṉ even asks. She has sent her husband to the cremation ground, her own son into a sea of grief, and Irāmaṉ, that ocean of mercy, into the harsh forest.
Long ago Vishnu, as Vāmaṉa, grew to a giant size to measure the worlds in his strides. Kaikēyi has "measured" them all with nothing but the cruelty she planned in her own mind. Kukaṉ's question is also phrased differently this time, putting the question first, perhaps because he can see she stands apart from the others.