கம்பராமாயணம் 2447 · அயோத்தியா 11.70

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்னக் கேட்டு - (குகன்) பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு; அவ் இரக்கம் இலாளையும் - அந்த இரக்கமற்றவளாகிய கைகேயியையும்; தன் நல் கையின் - தன் நல்ல கைகளால்; தாய் என வணங்கினன் - தனக்குத் தாய் எனக் கருதி வணங்கினான்; தோணி - மரக்கலம்; அன்னப் பேடை - பெண் அன்னம்; சிறை இலது ஆய் - சிறகுகள் இல்லாமல், கரை துன்னிற்று என்னவும் - கரையை வந்து அடைந்தது என்று சொல்லலாம்படி; வந்தது - கரையை வந்தடைந்தது.

“மடமான் இரக்கம் இன்மையன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன், பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே” என்று முன்பும் கூறியவர் (1484) ஆதலால் இங்கேயும் 'இரக்கம் இலாளை' என்றார். மற்றத் தாயரைத் தாயர் என நினைத்து வணங்கினான் என்னாது வாளா கூறியவர் இங்கே கைகேயியைத் தாய் என வணங்கினான் எனக் கூறியது குகனுக்குக் கைகேயி சிறப்பு வகையிலும் தாயாதல் பற்றி; அதனை உணர்ந்தே குகன் தாய் என வணங்கினன். அங்ஙனம் தன் தாயை வணங்கக் கிடைத்த அவன் கைகளை 'நல் கை' என்றதும் அறிக. கைகேயி வரம் வாங்கி இராமனை வனத்துக்கு அனுப்பாமல் இருந்திருப்பின் குகன் எப்படி இராமசகோதரனாக முடியும்; ஆகவே, குகனை இராம குடும்பத்தில் ஒரு சகோதரனாகச் சேர்த்தவள் கைகேயியே அன்றிக் கோசலையும் சுமித்திரையும் அல்லர் என்பதைக் குறிப்பாகத் 'தாய் என' என்ற சொற்களால் பெற வைத்தார். தோணிகளுக்குச் சிறகுகள் இல்லையாதலின் பெண்ணன்னம் சிறை இல்லாமல் கரைக்கு வந்தாற் போன்றது என்றாராம். 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing this, he bowed with his own good hands
  2. even to that pitiless woman, as to a mother;
  3. and the boat came to the shore as if
  4. a female swan without wings had reached the bank.

What the poem says

Even after hearing all this, Kukaṉ bows to the pitiless Kaikēyi, honouring her too as his mother. The commentary sees a quiet irony. Kaikēyi is the one mother to whom Kukaṉ really owes his place in the family, because without her boon Irāmaṉ would never have come to the forest and adopted him as a brother.

Then the boat glides into the southern bank, gentle as a swan, only without wings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉak kēṭṭu av irakkam ilāḷaiyum,
taṉ nal kaiyiṉ, vaṇaṅkiṉaṉ tāy eṉa;
aṉṉap pēṭai ciṟai ilatu āyk karai,
tuṉṉiṟṟu eṉṉavum vantatu tōṇiyē.