கம்பராமாயணம் 2448 · அயோத்தியா 11.71

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இழிந்த தாயர் சிவிகையின் ஏகத் தான்
பொழிந்த கண்ணீர்ப் புது புனல் போயினான் ;
ஒழிந்திலன் குகனும் , உடன் ஏகினான் ;
கழிந்தனன் பல காவதம் காலின் ஏ .

பொருள் · Meaning in Tamil

(தோணியிலிருந்து) இழிந்த - இறங்கிய; தாயார் - தாய்மார்கள்; சிவிகையின் ஏற - பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த புதுப் புனல் போயினான் - கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில் நடந்து சென்றான்; குகனும் ஒழிந்திலன் உடன் ஏகினான் - குகனும் தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்; காலில் பல காவதம் கழிந்தனன் - (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து கடந்தான்.

கண்ணிலிருந்து நீர் சிந்த, அதன் மேல் நடந்து பல காவதம் கடந்து சென்றான் என்பதைப் 'புதுப்புனல் போயினான்' என்றார். 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mothers who had come down from the boat got into palanquins; he himself
  2. went on through the fresh flood that poured from his eyes;
  3. Kukaṉ did not stay behind, but went with him;
  4. and many leagues he covered on foot.

What the poem says

On the far bank the three queens are carried in palanquins, but Paratan keeps walking, as Irāmaṉ did. He goes on through "a fresh flood" of his own tears, his eyes streaming so much that he seems to be wading through them.

Kukaṉ does not stay in his own country. He walks beside Paratan for many leagues.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻinta tāyar civikaiyiṉ ēṟa tāṉ
poḻinta kaṇṇiṉ putup puṉal pōyiṉāṉ;
oḻintilaṉ kukaṉum, uṭaṉ ēkiṉāṉ;
kaḻintaṉaṉ pala kāvatam kāliṉē.