கம்பராமாயணம் 2459 · அயோத்தியா 12.10

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நானம் நன்கு உரைத்தார் , நளிர் வான் இடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் ;
கான மா மணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார் .

பொருள் · Meaning in Tamil

(அரம்பையர் மைந்தர்க்கு) நானம் - (கஸ்தூரி முதலியவற்றாலாய) வாசனைப்பொடியை; நன்கு உரைத்தார் - நன்றாக உடம்பில் பூசினர்; நளிர் வானிடை ஆன - குளிர்ந்த ஆகாயத்திடத்தில் உள்ள; கங்கை அரும்புனல் ஆட்டினார் - கங்கைநதியின் அரிய நீரால் முழுக்காட்டி; தான மா மணிக் கற்பகம் - தேவருலகத்தில் உள்ள பெரிய அழகிய கற்பக மரங்கள்; தாங்கிய - சுமந்த; ஊனம் இல் மலர் ஆடை - குறைவு இல்லாத மலர்களால் ஆகிய ஆடையை, உடுத்தினார் - அணிவித்தார்கள்.

நானம் - கஸ்தூரி. இங்கு அதுமுதலாகிய, கூட்டுப் பொருளாகிய சுண்ணம் குறித்தது. மலர் ஆடை - மலரே ஆடையாம்; பூத்தொழில் பொதிந்த ஆடையும் ஆம். தான - வண்மைக்குணம் உடைய (கற்பகம்) என உரைத்தலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They rubbed fragrant powder well upon them; in the cool sky
  2. the rare waters of the Kaṅkai flow, and in those they bathed them;
  3. then, in flawless garments of flowers borne
  4. by the great, lovely kaṟpakam trees of heaven, they clothed them.

What the poem says

Paratan's army has halted for the night at the hermitage of the sage Parattuvācaṉ, who by his power calls down the pleasures of heaven to entertain his guests. In this run of verses the celestial dancing-women, the Arampaiyar, wait on the young men of the army.

They anoint the men with musk-scented powder, bathe them in the heavenly Kaṅkai that flows through the sky, and dress them in garments made of flowers from the kaṟpakam, the wish-granting trees of the gods. The garments may be woven of flowers or embroidered with flower patterns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṉam naṉku uraittār, naḷir vāṉiṭai
āṉa kaṅkai arum puṉal āṭṭiṉār;
tāṉa māmaṇik kaṟpakam tāṅkiya
ūṉam il malar āṭai uṭuttiṉār.