கம்பராமாயணம் 2460 · அயோத்தியா 12.11

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் ,
செம் பொனின் கல ராசி திருத்தினார் ;
அம்பரத்தின் அரம்பையர் , அன்பொடும் ,
உம்பர் கோன் நுகர் இன் அமிழ்து ஊட்டினார் .

பொருள் · Meaning in Tamil

கொம்பின் - பூங்கொம்பு போல; நின்று - வளைந்து நின்று; நுடங்குறு - ஒல்கி அசைகின்ற; கொள்கையார் - பண்புடைய; அம்பரத்தின் அரம்பையர் - வானுலக அரம்பை மாதர்; (மைந்தர்க்கு) செம்பொனின் கல ராசி - செம்பொன்னால் ஆகிய அணிகளை; திருத்தினார் - நன்கு அணிவித்து; அன்பொடும் - பிரியத்தோடும்; உம்பர்கோன் நுகர் இன் அமுது - தேவேந்திரன் உண்ணக் கூடிய இனிய அமுத உணவினை; ஊட்டினார் - உண்பித்தார்.

கொம்பின் - இன்: உவம உருபு. கல ராசி - அணிகலன்களின் தொகுதி; பல்வேறு அணிகள். இந்திரன் உண்ணும் அமுதத்தை இவ்வாடவர்களுக்கு அரம்பையர் ஊட்டினார் ஆம். உரைத்து, ஆட்டி, உடுத்தி, திருத்தி, அமுது ஊட்டினார் என்க. மேல் முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They whose way was to stand and sway like flowering sprays
  2. decked them out with heaps of ornaments of red gold;
  3. and the Arampai maidens of the sky, with love,
  4. fed them the sweet nectar that the lord of the gods enjoys.

What the poem says

The heavenly women continue their service to the men of Paratan's army. Slender and swaying like flowering branches, they put ornaments of fine gold on the men and then feed them, lovingly, the nectar that Intiraṉ, king of the gods, eats.

The verse completes a chain of actions begun in the previous one: anointing, bathing, dressing, adorning and feeding. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kompiṉ niṉṟu nuṭaṅkuṟu koḷkaiyār,
cempoṉiṉ kala rāci tiruttiṉār;
amparattiṉ arampaiyar, aṉpoṭum,
umparkōṉ nukar iṉ amutu ūṭṭiṉār.