கம்பராமாயணம் 2461 · அயோத்தியா 12.12

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அலத்தகப் பஞ்சு அடுத்த - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற; பரிபுர - சிலம்பு அணிந்த; பல்லவ - தளிரனைய பாதங்களையும்; நஞ்சு அடுத்த - விடம் தீட்டப்பெற்ற; நயனியர் - கண்களையும் உடைய அரம்பையர்; அஞ்சு அடுத்த அமளி - ஐந்து பொருள்களை உள்ளடக்கிய மெத்தையின் மேல், நவ்வியின் துஞ்ச - பெண்மான்கள் போல (அருகில்) உறங்க; அத்தனை மைந்தரும் - (பரதனுடன் வந்த) எல்லா இளைஞரும்; துஞ்சினார் - தூங்கினார்கள்.

அமுதாட்டியபின் அம்மகளிர் படுத்துக்கிடக்க மைந்தரும் தூங்கினார் என்க. நயனியர் துஞ்ச என்றது ஈண்டுப் போகத்தின்பின் நிகழும் அவச உறக்கமாகும் என்பது குறிப்பு. அஞ்சு - ஐந்து என்பதன் வழக்குச் சொல்லாகிய போலி. அஞ்சு அடுத்த அமளி - அன்னத்தூவி, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி, வெண்பஞ்சு என்னும் ஐந்து பொருள்களால் செய்யப்பெற்ற மெத்தை. இதனைச் “சிறு பூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சேக்கையோரைந்து” என்பதனான் அறிக. “ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி” (சிந்தா. நச் உரை. 838.) அஞ்சு அடுத்த அமளி - பஞ்சசயனம் ஆம். “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி” (திவ்ய. திருப்பாவை 491) என்பதன் உரையுள் பஞ்ச சயனமாவது, அழகு, குளிர்ச்சி, மிருது, மணம், வெண்மை ஆக இவை; அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை என்றுமாம் என்ற பெரியவாச்சான்பிள்ளை உரையை ஈண்டுக் கருதுதல் நலம் தரும். அலத்தகம் - செம்மை. அலத்தகப் பஞ்சு எனலின் செம்பஞ்சாம். நஞ்சு அடுத்த - விடத்தை ஒத்த என்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On beds layered with five soft things, as the women whose
  2. sprout-soft feet wore anklets and red lac-dyed cotton,
  3. whose eyes were edged as with poison, lay sleeping like does,
  4. all those young men slept as well.

What the poem says

After the feast, the heavenly women lie down beside the young men of the army, and the men sleep. The suggestion is the heavy, languid sleep that follows love.

The bed is a 'five-fold' bed, a traditional luxury stuffed with five soft materials such as swan's down, peacock down and kinds of cotton. The women's feet are dyed red and called sprouts for their softness; their eyes are 'poisoned', a stock image for eyes that wound the men who see them. Lying beside the men, they are like sleeping does.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcu aṭutta amaḷi, alattakap
pañcu aṭutta paripurap pallavam,
nañcu aṭutta nayaṉiyar, navviyiṉ
tuñca, attaṉai maintarum tuñciṉār.