கம்பராமாயணம் 2465 · அயோத்தியா 12.16

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யானை - (அச்சேனையில் உள்ள) யானைகள்; அளிக்குலம் - வண்டுக் கூட்டங்கள்; மா மதம் - (தம்முடைய) பெரிய மதநீர்ப் பெருக்கை; வந்து மான்று உண - வந்து உண்டு மயங்க; (தாம்) கற்பகம் - கற்பக மரங்கள்; தேன் தளிர்த்த கவளமும் - தேன் மிகுதியாகக் கலக்கப்பெற்ற உணவுருண்டையையும்; செங்கதிர் கான்ற நெல்தழைக் கற்றையும் - சிவந்த கதிர்களை யீன்ற நெற்பயிரின் கதிர்க்கட்டுகளையும்; ஈன்று அளிக்க - பெற்று உண்ணத் தர; நுகர்ந்தன - அவற்றை உண்டு இன்புற்றன.

யானைகள் உண்டபடி கூறினார். மதநீரை வண்டுகள் உண்ண, தாம் கற்பகம் தந்த கவளமும் தழையும் உண்டன என்றார். நெய்மிதி கவளம் தரல் யானைக்கு வழக்கம். இங்குத் தேன் மிதி கவளம் என்றது தேவருலகத்துச் சிறப்பாம். “ஏ” ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While swarms of bees came and drank their rich ichor till they reeled,
  2. balls of fodder steeped in honey, and sheaves of paddy
  3. that had put forth red ears of grain, which the kaṟpakam trees
  4. brought forth and gave them, the elephants enjoyed.

What the poem says

Even the animals of the army are feasted. The war elephants eat fodder supplied by the wish-granting trees, while bees crowd to drink the musth that flows from their temples.

Elephants were usually fed balls of rice soaked in ghee; here the balls are soaked in honey, a touch of heavenly luxury. They also get bundles of ripe paddy with reddish ears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉṟu aḷik kulam mā matam vantu uṇa
tēṉ taḷirtta kavaḷamum, cem katir
kāṉṟa nel taḻaik kaṟṟaiyum, kaṟpakam
īṉṟu aḷikka, nukarntaṉa yāṉaiyē.