கம்பராமாயணம் 2466 · அயோத்தியா 12.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கர கதக் கரி - துதிக்கையை உடைய கோபமுற்ற யானைகள்; நரகதர்க்கு - நரகத்தை அடைய வல்ல பாவிகளுக்கும்; அறம் நல்கும் - புண்ணியப் பயனைத் தந்து (அந்நரகத்திலிருந்து) அவரை மீட்க வல்ல; உண்டன - கால்களை நிமிர வைத்துப் பருகின; குரகதத்தின் குழாங்கள் - குதிரைக் கூட்டங்கள்; மரகதத்தின் கொழுந்து என வார்த்த புல் - மரகத மணியின் ஒளிக்கொழுந்து போல் பசிய நீண்ட புல்லை; கொண்ட - உட்கொண்டன.
யானைகள் நீர் உண்டதும், குதிரைகள் புல் உண்டதும் கூறியபடி. ‘நரகு அதர்க்கு’ எனப் பிரித்து, நரக வழிக்கு அறம் நல்கும் எனப் பொருள் உரைத்தலும் ஒன்று. நீர் தேவகங்கைநீர் தீர்த்த விசேடம் ஆதலின் பாவத்தை மாற்றும் தன்மை படைத்தது என்றாராம். “ஏ” ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Water so good that it grants merit even to those bound for hell
- the wrathful, trunked elephants drank, stretching their legs straight;
- and grass grown long like the gleaming shoots of emerald
- the herds of horses took as well.
What the poem says
The feast of the animals continues. The elephants drink water from the heavenly Kaṅkai, so holy that it can earn merit even for sinners destined for hell and rescue them from it. The horses graze on long, fresh grass that shines green like emerald.
The phrase about hell can also be read as 'merit for those on the road to hell'. Either way, the point is the sanctity of the celestial river's water.