கம்பராமாயணம் 2467 · அயோத்தியா 12.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யாவரும் - எல்லோரும்; இன்னர் - இத்தன்மையராய்; இன்னணம் - இவ்வாறு; இந்திரன் துன்னு போகங்கள் - இந்திரன் அனுபவிக்கின்ற இன்பங்களை; துய்த்தனர் - அனுபவித்தார்கள்; தோன்றல் - பரதன்; அன்ன காயும் கிழங்கும் உண்டு - அத்தகைய காயும், கிழங்கும் ஆகியவற்றை உண்டு; பொன்னின் மேனி - பொன்மயமான தன்னுடம்பு; பொடி உற - புழுதி படும்படி; அப் பகல் - அந்நாளை; போக்கினான் - கடத்தினான்.
அனைவரும் இனிது உறங்கப் பரதன் விரதவொழுக்கத்தோடு நாளைக் கடத்தினன் என்றவாறாம். ‘அன்ன காயும்’ என்பதில் ‘அன்ன’ உரையசையாக வந்ததாகக் கொள்க. இனி ‘கற்பகமரத்திலிருந்து கிடைத்த’ என்பாரும் உளர் ஆயின் அது உலக இன்பத்துக்கு முரணானதாக ஆகிப் பரதனது விரதவொழுக்கத்துக்குப் பங்கமாதலின் அவ்வாறுரைத்தல் ஏலாதாம். ‘தான்’ என்பதும் உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Such were they all, and in this way they tasted to the full
- the pleasures Intiraṉ enjoys; but the prince himself
- ate only such fruits and roots, and that day
- he passed with his golden body lying in the dust.
What the poem says
While the whole army revels in heavenly pleasures at the sage's hermitage, Paratan alone keeps his vow of austerity. He eats only wild fruits and roots and spends the time lying on the bare earth, his golden body covered with dust.
The fruits and roots are ordinary forest food, not gifts of the wish-granting tree; reading them as heavenly fare would break the vow Paratan has taken while his brother lives in exile.