கம்பராமாயணம் 2468 · அயோத்தியா 12.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீலம் - நீல நிறம் உள்ள; வல் இருள் - திணிந்த இருளானது; நீங்கலும் - நீங்கிய அளவில்; நீங்குறும் - தாறும் இல்லாமல் போகி விடுகிற; மூலம் இல் - அடித்தளம் அற்ற, கனவின் - கனவு போல; திருமுற்றுற - சேனைகள் அனுபவித்த செல்வ போகம் முடிவடையும் படி, ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு - பொருந்திய புண்ணியப் பயனை அனுபவிப்பவர்க்கு; ஈறுசெல் காலம் என்ன - அது முடிவடையும் காலம்போல; கதிரவன் - சூரியன்; தோன்றினான் -.
கங்குற் பொழுது நீங்கியது; கதிரவன் தோன்றினான்; முன்பு பரதனுடன் வந்தோர் அனுபவித்த போகமும் முடிவுக்கு வந்தது. இதனைக் கனாப்போல என்றார். புண்ணியம் முடிந்த பின்னர் மீண்டும் சுவர்க்கத்திலிருந்து மண்ணுலகிற்கு வருவார்போல அவர்கள் நிலை ஆகிறது ஆகலின் “ஈறு செல் காலம் என்ன” என்று கதிரவன் தோற்றத்தை வருணித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the dense blue darkness departed, like a rootless dream
- that fades away, so that their splendour came to its close,
- like the hour when, for those enjoying the fruit of good deeds,
- that fruit runs out, the sun rose.
What the poem says
Morning comes and the night of enchantment ends. The sunrise wipes away the army's heavenly luxuries like a dream that has nothing under it.
The poet compares it to the moment when souls in heaven have used up their store of merit and must fall back to earth to be born again. For the soldiers, the sun's rising is that moment.