கம்பராமாயணம் 2470 · அயோத்தியா 12.21

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1காலை என்று எழுந்தது ; கண்டு , வானவர் ,
'வேலை ' என்று , 'அனிகம் ' என்று ஏங்கி விம்முறச்
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழப்
பாலை சென்று , அடைந்தது பரதன் சேனை ஏ .

பொருள் · Meaning in Tamil

பரதன் சேனை -; காலை என்று எழுந்தது கண்டு - காலைப் பொழுது வந்துவிட்டது என்று கருதிப் புறப்பட்டது கண்டு; வானவர் - தேவர்; ‘வேலை அன்று; அனிகமே’ என்று விம்முற - இது கடல் அன்று, சேனைதான் எனக் கருதித் தமது ஐயம் நீங்கி மனக்களிப்பு அடைய; (அச்சேனை) சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ - (தாம் செல்லும் வழியில் உள்ள) சோலையும், மலைகளும் புழுதியாகி மேலே புறப்பட; பாலை சென்று அடைந்தது - பாலைநிலத்தைச் சென்று சேர்ந்தது.

இதுகாறும் இருளில் கடல் என்று கருதியிருந்த வானவர் பகற்பொழுது வந்து புறப்பட்ட அளவிலே சேனை என்று துணிந்தனர் என்பதால் ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying 'It is morning', it rose; seeing it, the gods
  2. swelled with joy, saying, 'It is no sea, it is an army!';
  3. and with groves and hills rising up as powder,
  4. Paratan's army went on and reached the desert land.

What the poem says

At dawn Paratan's army breaks camp and moves on. Through the night the gods watching from the sky had taken the vast, murmuring host for an ocean; only when it got up and began to move were they sure it was an army.

So great is the host that the groves and hills it passes over are ground to dust that rises into the air. It now enters pālai, the parched wasteland of Tamil poetic geography.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālai eṉṟu eḻuntatu; kaṇṭu, vāṉavar,
'vēlai aṉṟu, aṉikamē ' eṉṟu vimmuṟa
cōlaiyum kirikaḷum cuṇṇamāy eḻa
pālai ceṉṟu, aṭaintatu parataṉ cēṉaiyē.