கம்பராமாயணம் 2472 · அயோத்தியா 12.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீப் பொதி படியுடை - நெருப்பு உள் தங்கிய இடத்தை உடைய; பரல் உடைப்பாலை - பருக்கைக் கற்களை உடைய பாலைநிலம்; வடி உடை - கூர்மை பொருந்திய; அயிற்படை - வேற்படையை உடைய, மன்னர் - அரசர்களது; வெண்குடை - வெண்குடையானது; செடி உடை நெடு நிழல் செய்ய - அடர்ந்துள்ள நீண்ட நிழலைச் செய்தலான்; மேல் உயர் கொடி உடைப் பந்தரின் - மேலே உயர்ந்துள்ள கொடிகள் படர்ந்துள்ள பந்தல்போல; எங்கும் - எவ்விடமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி உடையதாக ஆயிற்று.
செடித்தன்மையாவது அடர்த்தியாகவும் குட்டையாகவும் இருத்தல்; அதனுள் குட்டையை விலக்கவேண்டி ‘நெடுநிழல்’ என்றாராதலின், அடர்ந்து நீண்ட நிழல் என்று பொருள் ஆயிற்று. மன்னர் குடையின் மிகுதியும் உயர்ச்சியும் குறித்தது. பந்தர் நிழல் தருதலும் அதன் மேலும் கொடி குளிர்ச்சி தருதலும் உண்டாதலின், மன்னர்தம் குடையின் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் ஏற்புடைய உவமையாயிற்று. கொடிப்பந்தர் என்னும் ஆம். ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the white parasols of kings armed with keen-edged spears
- cast a long shade, dense as thickets, the land that held fire within,
- the pebble-strewn desert, became, like a pavilion
- roofed with creepers raised up high, cool in every part.
What the poem says
The many kings marching with Paratan carry white royal parasols, and there are so many of them, held so high, that they make a long, unbroken shade over the burning, stony waste.
The poet compares the effect to a pavilion with creepers trained over its roof: the roof gives shade and the leaves add coolness. So the desert, which seems to hold fire in its ground, becomes cool everywhere.