கம்பராமாயணம் 2474 · அயோத்தியா 12.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“உயிரினும் ஒழுக்கம் நன்று” என ஒன்று உரைத்து - உயிரைவிட நல்லொழுக்கமே சிறந்து விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்து; பொன்றிய புரவலன் - உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது; பொரு இல் சேனை - ஒப்பற்ற சேனையானது; வன்தெறு பாலையை - கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது - (முன்கூறியவாறு நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால்) மருதநிலம் ஆகும் என்று கருதி எளிதாகக் கடந்து சென்று; சித்திரகூடம் சேர்ந்தது - சித்திரகூட மலையை அடைந்தது.
பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால் வழி வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலாற் குளிர்ச்சியானதாலும் ஆம் என மேற் கூறினார். உயிரை இம்மை மறுமை வீடு என்னும் மூன்று இடத்தும் பயன்கொள்ள வைப்பது ஒழுக்கம் ஆதலின், ‘உயிரினும் ஒழுக்கம் நன்று’ எனப்பட்டது. “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம், உயிரினும் ஓம்பப் படும்” (குறள் 131.) என்பதனை ஒப்பு நோக்குக. ‘ஏ’ ஈற்றசை. ‘ஆல்’ அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cruel, scorching desert, as though it were fertile marutam land,
- it crossed, and so reached Cittirakūṭam:
- the peerless army of the king who, having spoken his one word, saying 'Right conduct is better than life',
- gave up his life.
What the poem says
The army is called the army of Tacarataṉ, the king who kept his promise to Kaikēyi and died of it, holding that right conduct matters more than life itself. The commentary cites the Tirukkuṟaḷ couplet that conduct must be guarded more carefully than life, because it brings honour.
Cooled by shade and softened by the elephants' ichor, the desert has been as easy to cross as marutam, the well-watered farmland of Tamil poetic geography. The army reaches the hill of Cittirakūṭam, where Irāmaṉ is living.