கம்பராமாயணம் 2484 · அயோத்தியா 12.35

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“வள்ளல் - இராமனே; நீ -; பண் முதிர் - அழகு மிக்க; களிற்றொடு - யானைகளோடு; பரந்த சேனையின் எண் - பரந்துபட்ட படைகளின் கணக்கை; முதல் அறுத்து - அடியோடு போக்கி; நான் இமைப்பின் நீக்கலால் - நான் கணநேரத்தில் அழித்தலால், (இவை அனைத்தும் வீர சுவர்க்கம் அடைந்து விண்ணில் ஏறலாம்); விண் முதுகு உளுக்கவும் - விண்ணுலகம் முதுகு நெளிக்கவும்; மண் - மண்ணுலகம் (பாரம் நீங்குதலின்), முதுகு ஆற்றவும் - முதுகு வலி நீங்கப் பெறவும்; காண்டி - பார்ப்பாயாக....

பண் - அலங்காரம். பண்ணுதல், கை செய்தல், அலங்கரித்தலாம். எண் முதல் அறுத்தல் - இல்லாதபடி செய்தல் ஆகும். போரில் இறந்தோர் வீரசுவர்க்கம் பெறுவர் ஆதலின், எல்லாச்சேனைகளும் இறந்து விண்ணுலகு பெற்றதனால் விண் முதுகுவலி எடுத்து நெளிக்கலாயிற்று. இனி ‘உளுக்க’ என்பதற்கு ‘இற்று உளுத்துப் போய் விழ’ எனவும் உரைக்கலாம். பூபாரம் நீங்கலின் மண் முதுகு ஆற்றியது என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The great army spread wide with its richly adorned bull elephants:
  2. since I shall cut off its very count and remove it in the blink of an eye,
  3. the sky's back will twist with strain, while the earth
  4. clad in the sea eases its back: this you shall see, generous one!'

What the poem says

Ilakkuvaṉ boasts that he will wipe out the whole army in a moment. Warriors who die in battle go to the heroes' heaven, so the sky will strain and twist its back under the weight of so many new arrivals.

The earth, meanwhile, will be relieved of its burden and rest its back. The verb for the sky's strain can also mean that it will crack and crumble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṇ mutir kaḷiṟṟoṭu paranta cēṉaiyiṉ
eṇ mutal aṟuttu, nāṉ imaippiṉ nīkkalāl,
viṇ mutuku uḷukkavum, vēlai āṭaiyiṉ
maṇ mutuku āṟṟavum kāṇṭi, vaḷḷal! nī. '