கம்பராமாயணம் 2485 · அயோத்தியா 12.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“நிவந்த - உயர்ந்து வழிந்து ஒழுகிய; வான் குருதியின் நீத்தம் - பெரிய இரத்த வெள்ளத்திலே; நீந்தி - நீந்திச் சேறலால்; மெய் சிவந்த - உடம்பு செந்நிறமாகப் பெற்ற; சாதகரொடு - பூத கணங்களோடு; சிறுகண் கூளியும் - (உடம்பிற்கு ஒவ்வாத) சிறிய கண்ணை உடைய பேய்களும், கவந்தமும் - தலையற்ற உடற்குறையும்; “உலகம் நின்கையது ஆயது” என்று - உலகமனைத்தும் இராமனாகிய உன் வசம் ஆய்விட்டது என்று; உம்பர் போல் - தேவர்கள் (மகிழ்தல்) போல; உவந்தன - மகிழ்ந்தனவாய்; குனிப்பன - நடனம் ஆடுவன; காண்டி - பார்ப்பாயாக....
சாதகரொடு “கூளியும் கவந்தமும் குனிப்பன” என முடியும். “பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர், அஃறிணை முடிபின செய்யுளுள்ளே” (தொல். சொல். கிளவி. 51.) என்பவாதலின் “குனிப்பன” என அஃறிணையாய் முடிந்தது. தேவர்கள் மகிழ்தல் இயல்பு. பேய்கள் மகிழ்ந்து ஆடுதலாகக் கூறியது தற்குறிப்பேற்றமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Swimming through the high-surging flood of blood, their bodies
- turned red, the goblins, and the small-eyed ghouls,
- and the headless trunks, crying "The world has come into your hand!",
- dancing for joy like the gods above: this you shall see.'
What the poem says
Ilakkuvaṉ pictures the demons of the battlefield after his victory. Goblins dyed red from swimming in rivers of blood, ghouls with tiny eyes and headless corpses that still move will all dance with joy, shouting that the world now belongs to Irāmaṉ.
The gods would naturally rejoice at such a victory; the poet gives the same joy to the demons, imagining a cause for their dance. The commentary also explains a point of grammar: a mixed list of persons and things can take a verb of the 'thing' class in verse.