கம்பராமாயணம் 2486 · அயோத்தியா 12.37

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சூழி வெம் கட கரி , துரக ராசிகள் ,
பாழி வன் புயம் அத்து இகல் வயவர் பட்டு அற ,
ஆழி வெம் குருதியால் அழிந்த வேலைகள்
ஏழும் , ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டி ஆல் . '

பொருள் · Meaning in Tamil

சூழி - முகபடாம் அணிந்த; வெங் கடகரி - கொடிய மதம் உடைய யானைகள்; துரக ராசிகள் - குதிரைத் தொகுதிகள்; பாழி - பருத்த; வன் - வலிய; புயத்து - தோளை உடைய; இகல் வயவர் - பகைத்த வீரர்கள்; பட்டு அற - செத்து விழ; வீழி - வீழ்ந்த; வெங்குருதியால் - கொடிய இரத்தப் பெருக்கால்; அலைந்த வேலைகள் ஏழும் - அலை வீசும் ஏழு கடல்களும்; ஒன்றாக நின்று - ஒரு கடலாகியிருந்து; இரைப்ப - ஒலிசெய்ய; காண்டி - பார்ப்பாயாக...

நால்வகைச் சேனைகளும் அடியோடு அழிதலால் உண்டான குருதியாறு கூடுதலால் ஏழுகடல்களும் ஒன்றாகி இரைத்தன. வீழி - வீழிப் பழம் போன்று சிவந்த குருதி என்றும் ஆம். அலைந்த என்பது வேலைகளுக்கு அடை. இனி, குருதியால் அலைவீசிய வேலைகள் ஏழும் ஒன்றாகின எனினும் அமையும். ‘ஆல்’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fierce elephants with face-armour and ichor-wet cheeks, herds of horses,
  2. and hostile warriors with strong, massive shoulders falling dead,
  3. the seven seas, tossed by the ocean of hot blood,
  4. joining into one and roaring: this you shall see.'

What the poem says

Ilakkuvaṉ promises that all four arms of Paratan's army, elephants, horses, chariots and foot soldiers, will be destroyed. So much blood will flow from them that the seven seas surrounding the world will merge into a single roaring ocean.

The commentary's reading takes the blood as the blood of the fallen; it could also be blood red as the vīḻi berry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cūḻi veṅ kaṭa kari, turaka rācikaḷ,
pāḻi vaṉ puyattu ikal vayavar paṭṭu aṟa,
āḻi veṅ kurutiyāl alainta vēlaikaḷ
ēḻum, oṉṟāki niṉṟu iraippak kāṇṭiyāl. '