கம்பராமாயணம் 2492 · அயோத்தியா 12.43

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலக்குவ ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவன் என்பது கருதினால் , அது
விலக்குவது அரிது ; அது விளம்ப வேண்டும் ஓ ?
புலக்கு உரித்து ஒரு பொருள் புகலக் கேட்டி ஆல் '

பொருள் · Meaning in Tamil

“இலக்குவ” - இலக்குவனே!; நீ உலகம் ஓர் ஏழும் ஏழும் “கலக்குவென்” என்பது கருதினால் - நீ பதினான்கு உலகங்களையும் நிலை கலங்கச் செய்வேன் என்பதைக் கருதிச் செயற்பட்டால்; அது - அச்செயல்; விலக்குவது அரிது - யாராலும் தடுத்தற்கரியது; அது விளம்பல் வேண்டுமோ? - அதைச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை (உலகப்பிரசித்தமாய் அனைவரும் முன்பு அறிந்துள்ளதே); புலக்கு உரித்து - (அது கிடக்க, இப்போது) அறிவுக்கு உரிய; ஒரு பொருள் - ஒரு செய்தியை; புகல - (நான்) உனக்குச் சொல்ல; கேட்டி - கேட்பாயாக...

பெருத்த வீர வார்த்தைகளைப் பேசிச் சினத்துடன் சீறி நிற்கும் இலக்குவன் பால், பரதனைப் பற்றித் தெளிவுறுத்தத் தொடங்கும் இராமன் முதலில் உபதேசத்தைத் தொடங்காது, அவனது சினத்தையும் பேராற்றலையும் மதித்துப் பாராட்டிப் பேசியது மனித இயல்புக்கு ஒத்து அமைந்தது பாராட்டத்தக்கது. புலக்கு - புலத்துக்கு - ‘அத்து’ கெட்டது. “கல்லார்ப் பிணிக்கும்” என்ற குறளில், ‘நிலத்துக்கு’ என்பது ‘நிலக்கு’ என்று நின்றாற் போல. (குறள். 570.) செய்யுள் விகாரம் என்பர் பரிமேலழகர் - புலம் என்பது அறிவு. சினம் மிக்குழி அறிவு எழாது ஆதலின் - சினத்தை அடக்கி அறிவினால் சிந்தித்தல் வேண்டும் என்பது உணர்த்தினானாம். ‘ஆல்’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Ilakkuvaṉ! If you set your mind on saying, "I will throw
  2. the seven worlds and seven more into turmoil", that
  3. none could prevent; need it even be said?
  4. Now hear me tell you a matter that belongs to reason.'

What the poem says

Irāmaṉ answers his angry brother. He does not begin by correcting him; first he grants that Ilakkuvaṉ could throw all fourteen worlds into confusion if he chose, and that no one could stop him. Everyone knows that already.

Only then does he ask Ilakkuvaṉ to listen to something that calls for clear thinking. The commentary praises this as true to human nature: anger shuts out reason, so the angry man must first be calmed before he is taught.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilakkuva! ulakam ōr ēḻum ēḻum nī
kalakkuveṉ eṉpatu karutiṉāl, atu
vilakkuvatu aritu; atu viḷampal vēṇṭumō?
pulakku urittu oru poruḷ pukalak kēṭṭiyāl '