கம்பராமாயணம் 2495 · அயோத்தியா 12.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பெருமகன் - பரதன்; என்வயின் பிறந்த காதலின் - என்னிடத்து உண்டாகிய அன்பினால்; வரும் என நினைகையும் - (காடு நோக்கி) வருகின்றான் என்று நினைப்பதும்; மண்ணை - கோசல அரசை; என்வயின் - என்னிடம்; தரும் என நினைகையும்” - தருவான் என நினைப்பதும்; தவிர - நீங்க; “தானையால் - சேனைகளால்; பொரும் - போர் செய்வான்; என நினைகையும்” - என்று நினைப்பதும்; புலமைப்பாலதோ? - அறிவின்பாற் பட்டது ஆகுமோ... (அன்று என்றபடி)
அன்பு முதிர்ந்தவழி அறிவு தொழிற்படாது ஆதலின், என் வயின் நேயம் மீதூர்ந்ததால் பரதனை அறிவால் அறிய இயலாதவன் ஆனாய் என்று இதற்கும் ஓர் அமைதியை இலக்குவனுக்கு முன்பே கூறியது காண்க. “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா” (சிந்தா- 1632.) என்பது ஈண்டு நினைக்கத் தருவது. பரதன் வருவதன் உண்மை இராமனால் தெளிவாக இலக்குவற்கு உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That the great one comes out of the love born in him for me,
- to think that; and that he will hand the earth over
- to me, to think that; instead of these, that with his army
- he will fight, to think that: is it born of wisdom?'
What the poem says
Irāmaṉ lays out the possible readings of Paratan's arrival. Paratan may be coming out of love for his brother, or to hand the kingdom back to him; to set those aside and assume he has come to make war is not the conclusion of a clear mind.
He has already explained why Ilakkuvaṉ thinks otherwise: when love runs high, reason stops working. The commentary cites a line from the Cīvakacintāmaṇi to the same effect: in excess of love even learning gives no help.