கம்பராமாயணம் 2496 · அயோத்தியா 12.47

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பொன் ஒடும் பொரு கழல் பரதன் போந்தனன் ,
நல் நெடும் பெரும்படை நல்கல் அன்றியே ,
என்னொடும் பொரும் என இயம்பற் பாலதோ ?
மின் ஒடு உம் பொருவுற விளங்கும் வேலினாய் ! '

பொருள் · Meaning in Tamil

“மின்னொடும் பொரு உற - மின்னலோடும் ஒப்புக் கொள்ளுமாறு; விளங்குவேலினாய் - விளங்குகின்ற வேலினை உடைய இலக்குவனே!; பொன்னொடும் பொருகழல் - பொன்னானியன்று பொன்னோடு மோதுகின்ற கழலை அணிந்த; பரதன் -; போந்தனன் - வந்துள்ளான்; (எதற்கு) நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே - (என்னை அரசனாக்கி எனக்கு) நல்ல நெடிய பெரிய சேனையைத் தருதற்காக அல்லாமல்; என்னொடும் பொரும் - என்னோடு சண்டையிடுவான்; என இயம்பற் பாலதோ? - என்று சொல்லலாமா?... (கூடாது என்றபடி)

கழல், பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொன்னொடும் பொருகழல்’ ஆயிற்று. ‘பொன்னொடும்’ என்பதைத் தனியே கொண்டு பொன்னொடும் படை நல்கல் எனக் கூட்டிப் பொருள் உரைப்பதும் உண்டு. பொன் தருதல் - அரசச் செல்வத்தைத் தருதல் என்று பொருள் படுதல் வழக்காற்றின் இன்மையும் இடையீடு இன்றிப் பொருகழல் என்பதனோடு அது மாறி முடிதலும் அமைதலின் அவ்வாறுரைக்க இயலாமையறிக. அரசர்கள் வசம் சேனையைத் தருதல் முறை ஆதலின் இராமனை அரசன் எனக் கருதும் பரதன், அவன்பால் சேனைகளைத் தர வருகின்றானாதல் வேண்டும் என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Paratan of the anklets that clash against gold has come
  2. for no other reason than to give me this fine, vast, great army;
  3. is it right to say that he will fight with me,
  4. you whose spear shines as if to rival the lightning?'

What the poem says

Irāmaṉ explains the army. An army belongs to the king, and Paratan regards Irāmaṉ as the rightful king, so he must be bringing the army to hand it over to him. To say he has come to fight is wrong.

Paratan's war-anklets are of gold, so they are said to clash against gold. Some read 'with gold' as going with the giving: he comes to give gold and an army. The commentary rejects this, since 'giving gold' is not an idiom for handing over royal wealth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poṉṉoṭum poru kaḻal parataṉ pōntaṉaṉ,
nal neṭum perum paṭai nalkal aṉṟiyē,
eṉṉoṭum porum eṉa iyampaṟpālatō?
miṉṉoṭum poruvuṟa viḷaṅku vēliṉāy! '